விடுதலையான சுதாகரன்; கண்கலங்கிய குடும்பத்தினர்

பெங்­க­ளூரு: பெங்­க­ளூரு பரப்­பன அக்­ர­ஹாரா சிறை­யில் இருந்து நேற்று காலை­யில் சுதா­க­ரன் விடு­த­லை­யா­னார். அவ­ரது வரு­கைக் காக அவ­ரது குடும்­பத்­தி­னர் சிறைச்­சாலை வாயி­லில் காத்­தி­ருந்­த­னர்.

சுதா­க­ர­னின் வழக்­க­றி­ஞர் உள்ளே சென்று சிறை நடை­முறை களை முடித்­து­விட்டு சுதா­க­ரனை வெளியே அழைத்து வந்­தார்.

அப்­போது அவர் பார்ப்­ப­தற்கு உடல் மெலிந்து காணப்­பட்­டார். இதைக் கண்ட அவ­ரது குடும்­பத் தினர் கண்­க­லங்­கி­னர்.

சொத்­துக் குவிப்பு வழக்­கில் ஜெய­ல­லிதா, சசி­கலா, சுதா­க­ரன், இள­வ­ரசி ஆகி­யோ­ருக்கு தலா நான்கு ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதித்து பெங்­க­ளூரு தனி நீதி­மன்ற நீதி­பதி ஜான் மைக்­கேல் குன்கா அதி­ரடி உத்­த­ரவிட்டார்.

அத்­து­டன், ஜெய­லலிதாவைத் தவிர மற்ற மூவ­ருக்­கும் தலா ரூ.10 கோடியே 10 ஆயி­ரம் அப­ரா­த­மும் விதித்­தார்.

இதை செலுத்­தத் தவ­றி­னால் மேலும் ஓராண்டு சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க நேரி­டும் என்றும் தீர்ப்­பில் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், 2017ஆம் ஆண்டு முதல் சிறை­யில் இருந்த சசி­கலாவும் இள­வ­ரசியும் தங்­க­ளது தண்­ட­னைக் காலம் முடிந்­த­தும் தலா ரூ.10 கோடியை அப­ரா­த­மாகச் செலுத்­தி­விட்டு இவ்­வாண்டு ஜன­வரி மாதம் விடு­தலையாகி­னர்.

ஆனால், இந்த அப­ரா­தத் ெதாகையை சுதா­க­ரன் மட்­டும் செலுத்­தவில்லை.

இந்நிலையில், அடுத்­தாண்டு பிப்­ர­வரி மாதம் வரை சிறை­யில் இருக்­க­வேண்­டிய சுதாகரன், 89 நாள்­க­ளுக்கு முன்­ன­தா­கவே விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!