மூவர் பலி; பள்ளிகளுக்கு விடுமுறை; மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடர்கிறது குமரியில் வெள்ளத்தில் மிதந்த 23 கிராமங்கள்

நாகர்­கோ­வில்: கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் கடந்த மூன்று நாள் களாக கன­மழை பெய்து வந்­த­தால் 23 கிரா­மங்­களை வெள்­ளம் சூழ்ந்­தது. அங்கு வசித்த மக்­கள் மீட்­கப்­பட்டு, நிவா­ரண மையங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவா்க­ளுக்­குத் தேவை­யான உண­வும் இதர அடிப்­படை வசதி களும் செய்து தரப்­பட்­டுள்­ளன.

மாவட்­டத்­தில் தண்­ணீர் தேங்கி நிற்­கும் பகு­தி­களில் உள்ள பள்ளி களுக்கு ஆட்­சி­யர் மா.அர­விந்த் நேற்று விடு­முறை அறி­வித்­­தார்.

கன­ம­ழை­ காரணமாக கடந்த 24 மணி நேரத்­தில் நாமக்­கல் மாவட்­டத்­தில் இரு­வ­ரும் கன்­னி­யா­கு­மரி மாவட்டத்­தில் ஒரு­வ­ரும் உயி­ரி­ழந்­துள்­ளனா். மழை வெள்­ளம் இழுத்­துச்சென்ற ஒரு­வ­ரைத் தேடும் பணி­யும் தொடர்­கிறது.

இந்­நி­லை­யில், இம்­மா­வட்­டத்­தில் நேற்று மழை குறைந்­த­தால் அணைகளில் இருந்து திறக்­கப்­படும் உபரி நீரின் அள­வும் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

இதைத்­தொ­டர்ந்து அங்­குள்ள மக்­க­ளைப் பாது­காப்­பாக மீட்­கும் பணி தொடர்­வ­தாக 'புதிய தலை முறை' தொலைக்­காட்சி செய்தி தெரி­வித்­தது.

குமரி மாவட்­டத்­தின் பல இடங்­க­ளி­லும் வெள்­ள­நீ­ரில் சாலை­கள் மூழ்­கி­யி­ருந்­த­தால் போக்­கு­வ­ரத்து துண்­டிக்­கப்பட்­டுள்­ளது.

கோதை­யாறு, குழித்­துறை தாமிர­ப­ரணி ஆறு, பர­ளி­யாறு, பழை­யாறு போன்­ற­வற்­றில் பெருக்­கெ­டுத்து ஓடிய தண்­ணீர் தற்­போது குறை­யத் தொடங்கியுள்­ள­தால் தாழ்­வான பகு­தி­கள், குடி­யி­ருப்­பு­கள், விளை நிலங்­களில் தேங்­கிய நீர் வடி­யத் தொடங்­கி­யுள்­ளது.

இனி வரும் நாள்களிலும் மழை பெய்வது தொடர்ந்­தால் அதை எதிா்கொள்­ளத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை உடனடியாக எடுக்­கு­ம்படி நீல­கிரி, திரு­நெல்­வேலி, தென்­காசி, கன்­னி­யா­கு­மரி, நாமக்­கல் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்­சி­யா்­க­ளுக்கும் முதல்­வர் மு.க. ஸ்டா­லின் காணொளி வழி அறி­வு­றுத்­தி உள்ளார்.

இதற்கிடையே, செங்­கல்­பட்டு மாவட்­டத்தில் பாலாற்­றங்­க­ரை­யோ­ரம் வசிக்­கும் மக்­க­ளுக்­கும் கன மழை காரணமாக வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!