கனிமொழி: தனியார் நிறுவன ஊழியர்கள் மாநில மொழியில் பேசுவதை கட்டாயமாக்குக

சென்னை: யார் இந்­தி­யர்­கள் என்று தமி­ழர்­க­ளுக்கு யாரும் பாடம் நடத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை என திமுக எம்பி கனி­மொழி கூறி­உள்­ளார்.

சொமேட்டோ போன்ற தனி­யார் நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் மாநில மொழி­யில் பேசு­வ­தைக் கட்­டா­ய­மாக்க வேண்­டும் என அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

அண்­மை­யில் சொமேட்டோ ஊழி­யர் ஒரு­வர் வாடிக்­கை­யாளரி­டம் பேசும்­போது, இந்திதான் இந்தியா­வின் தேசிய மொழி என்­றும் அனை­வ­ருக்­கும் சிறி­த­ள­வே­னும் இந்­தி­யில் பேசத் தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் குறிப்­பிட்­டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது. இந்­நி­லை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான கனி­மொ­ழி­யும் தமது எதிர்ப்பை டுவிட்­ட­ரில் பதிவு செய்­துள்­ளார்.

"குறிப்­பிட்ட மொழி­களில் மட்­டுமே ­சில நிறு­வ­னங்­க­ளின் வாடிக்கை­யா­ளர் சேவைப்பிரிவுகள் செயல்­பட்டு வரு­கின்­றன. நிறு­வ­னங்­கள் தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­களி­டம் மாநில மொழி­யில் பேசு­வதைக் கட்­டா­ய­மாக்க வேண்­டும். வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இந்தி அல்­லது ஆங்­கி­லம் தெரிந்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை," என கனி­மொழி தெரி­வித்­துள்­ளார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும்தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

"அலு­வல் மொழி­யாக இந்தி இருந்­தா­லும் கூட, பிற மொழியை தாய்­மொ­ழி­யா­கக் கொண்­ட­வர்­கள் இந்தி கற்­றுக்கொள்ள வேண்­டும் என்று எந்­தக் கட்­டா­ய­மும் கிடை­யாது. ஆனா­லும் பல்­வேறு வழி­களில் தமி­ழர்­கள் மீது இந்­தியை திணிப்­ப­தற்­கான முயற்­சி­கள் நடந்து கொண்டுதான் இருக்­கின்­றன. தனி­யார் உணவு வினி­யோக நிறு­வ­னம் தான் இத்­த­கைய முயற்சி­யில் முத­லில் ஈடு­பட்­டது என்று கூற முடி­யாது.

"வங்­கி­கள், அஞ்­சல், விமான நிலை­யங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு இடங்­களில், 'இந்­தி­ய­னாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரி­யாதா' என்ற அவ­ம­திக்­கும் வகை­யி­லான கேலி வினாக்­கள் தமி­ழர்­களை நோக்கி எழுப்­பப்­படுகின்­றன," என ராமதாஸ் கூறி­யுள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!