இரு மீனவர்கள் சிறைபிடிப்பு; ஒரு மீனவர் பலி: கோட்டைப்பட்டினத்தில் சாலை மறியல்

புதுக்­கோட்டை: தமி­ழக மீன­வர்­கள் இரு­வரை இலங்­கைக் கடற்­படை சிறை­பி­டித்­ததை அடுத்து, புதுக்­கோட்டை மாவட்ட மீன­வர்­கள் மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

மேலும், இலங்­கைக் கடற்­படை­யி­ன­ரின் சுற்­றுக்­கா­வல் படகு மோதி­ய­தில் மீன­வர் ஒரு­வர் இறந்து­விட்­ட­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இரு தினங்­க­ளுக்கு முன்பு கோட்­டைப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த 450க்கும் மேற்­பட்ட மீன­வர்­கள் மீன்­பி­டிக்க கட­லுக்­குச் சென்­ற­னர்.

நெடுந்­தீவு அருகே மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­போது, அங்கு வந்த இலங்கைக் கடற்­ப­டை­யின் சுற்­றுக்­கா­வல் படகு, மீன­வர்­க­ளின் படகு மீது வேக­மாக மோதி­யுள்­ளது. இத­னால் அப்­ப­ட­கில் இருந்த மூன்று மீன­வர்­கள் அதிர்ச்சி அடைந்து உயிர்­பி­ழைக்க கட­லில் குதித்­துள்­ள­னர்.

அவர்­களில் ராஜ்­கி­ரண் என்­ப­வரை கண்­டு­பி­டிக்க முடி­யாத நிலை­யில், கட­லில் தத்­த­ளித்த மற்ற இரு மீன­வர்­களை கடற்­ப­டை­யி­னர் மீட்டு காங்­கே­சம் துறை­மு­கத்­துக்கு கொண்டு சென்­ற­னர். பின்­னர் அவர்­கள் மீது வழக்­குப் பதி­வா­னது.

தமி­ழக மீன­வர்­க­ளின் பட­கின் மீது மோதி, இலங்­கைக் கடற்­படை­யி­னர் அதை மூழ்­க­டித்­ததை அரு­கில் மீன்­பி­டித்­துக்கொண்­டி­ருந்த மீன­வர்­கள் பார்த்­துள்­ள­னர்.

கரை திரும்­பிய பிறகு மீன­வர் சங்­கப் பிர­தி­நி­தி­கள் இது­கு­றித்து போலி­சுக்கு புகார் அளித்­த­னர்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் மீன­வர்­க­ளின் மறி­யல் போராட்­டம் நடை­பெற்­றது. இதற்­கி­டையே, கட­லில் மாய­மான ராஜ்­கி­ரண் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­க­வும் அவ­ரது சட­லத்­தைக் கைப்­பற்றி உள்­ள­தா­க­வும் இலங்கை அரசு அறி­வித்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!