பழனிசாமி: சசிகலா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: சசி­கலா பேசு­வதை எல்­லாம் பொருட்­ப­டுத்­தவே இல்லை என எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

அதி­மு­க­வில் இல்­லாத ஒரு­வர் பேசு­வதை ஊட­கங்­கள் பர­ப­ரப்­புக்­காக பெரி­து­ப­டுத்­து­கின்­றன என்று நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

"அதி­மு­க­வுக்­கும் சசி­க­லா­வுக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை. அவர் தம்மை அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் என்று கூறி வரு­வது தொடர்­பாக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

"நீதி­மன்­றம், தேர்­தல் ஆணை­யம் என அனைத்து அமைப்­பு­க­ளுமே நாங்­கள்­தான் உண்­மை­யான அதி­முக என்று ஏற்­கெ­னவே தெளிவு­படத் தெரி­வித்­து­விட்­டன," என்­றார் பழ­னி­சாமி.

அண்­மை­யில் சென்­னை­யில் உள்ள எம்­ஜி­ஆர் நினைவு இல்­லத்­துக்­குச் சென்ற சசி­கலா, அங்கு அதி­முக கொடியை ஏற்­றி­னார். அங்­குள்ள கல்­வெட்­டில் 'அதி­முக பொதுச் செய­லா­ளர் வி.கே.சசி­கலா' என்று பொறிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் அதி­முக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்­துள்ள நிலை­யில், சசி­கலா மீது சட்டபூர்வ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என எச்­ச­ரித்­துள்­ளார் எடப்பாடி பழ­னி­சாமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!