50,000 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்

சென்னை: தமி­ழ­கத்­தில் ஏறக்­கு­றைய 50,000 இடங்­களில் ஆறாம் கட்ட மாபெ­ரும் கொவிட்-19 தடுப்­பூசி முகாம் இன்று நடத்­தப்­ப­டு­கிறது.

மாநில மக்­க­ளைக் கொரோனா தாக்­கத்­தில் இருந்து பாது­காக்­கும் வகை­யில், ஆங்­காங்கே இன்­னும் தடுப்­பூசி போடா­மல் இருக்­கும் 18 வய­துக்கு மேலா­ன­வர்­க­ளைத் ேதடிக் கண்­டு­பி­டித்து தடுப்­பூசி போடும் பணி நடந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், இத்­தொற்­றின் மூன்­றா­வது அலை அடுத்­தாண்டு ஜன­வரி, பிப்­ர­வ­ரி­யில் தொடங்க வாய்ப்­புள்­ள­தாக சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

முன்­ன­தாக கொரோனா மூன்­றா­வது அலை செப்­டம்­பர், அக்­டோ­பர் மாதங்­களில் தொடங்­கும் என கணிக்­கப்­பட்ட நிலை­யில், அது­போல் எது­வும் நடக்­க­வில்லை. தற்­போது, தீபா­வளி பண்­டி­கையை மையப்­ப­டுத்தி நவம்­பர் மாதத்­தில் மூன்­றா­வது அலை வரு­வ­தற்கு வாய்ப்­புள்­ள­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் இது­வரை 18 வய­துக்கு மேற்­பட்ட 6 கோடி மக்­களில் 68% பேருக்கு முதல் தவணை தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளது. இன்­னும் ஒரு வாரத்­தில் இந்த இலக்கு 70% மக்­களை எட்­டி­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தடுப்­பூ­சியை பெரும்­பா­லா­ன­வர்­கள் போட்­டுக்­கொண்­டால் கிருமி பர­வு­வ­தும் உயி­ரி­ழப்பு ஏற்­ப­டு­வ­தும் தடுக்­கப்­படும் என்­றும் தமி­ழ­கத்­தில் முன்­ன­தா­கவே மூன்­றா­வது அலை தொடங்­கி­னா­லும் அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்டு தயார் நிலை­யில் இருப்­ப­தா­க­வும் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!