131% சொத்து குவித்ததாக இளங்கோவன் மீது வழக்குப் பதிவு புதிய மாளிகை வீட்டால் 27 இடங்களில் சோதனை

சென்னை: சேலத்­தில் பிரம்­மாண்ட மான மாளிகை போன்ற வீடு ஒன்றை சேலம் மத்­திய கூட்­டு­றவு வங்கி சங்­கத் தலை­வர் இளங் கோவன் கட்டி வரு­கி­றார்.

இந்­தத் தக­வல் லஞ்ச ஒழிப்­புப் போலி­சா­ருக்­குத் தெரியவந்­த­தைத் தொடர்ந்து, அவர்­கள் ரக­சிய விசா ரணை நடத்­தி­னர்.

அப்ேபாது, இளங்­கோ­வன் வரு மானத்­திற்கு அதி­க­மாக சொத்து குவித்­த­தைக் கண்­டு­பி­டித்­த­னர்.

புதி­தா­கக் கட்­டப்­பட்டு வரும் வீட்­டால் இளங்­கோ­வன் வச­மாக சிக்கியுள்­ள­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, அவர்­கள் தங்­க­ளது சோதனை நட­வ­டிக்கைகளை நேற்று காலை முதல் முடுக்­கி­ விட்டனர்.

தமிழ்­நாடு மாநில கூட்­டு­றவு சங்­கத் தலை­வ­ரும் ஜெய­ல­லிதா பேர­வை­யின் மாவட்­டச் செய­லா­ள­ரு­மான இளங்­கோ­வனுக்குச் சொந்த மான 27 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புப் போலிசார் சோதனைக­ளைத் தொடர்ந்­த­னர்.

வாழப்பாடியை அடுத்த புத்திர கவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடந்துகொண்டிருந்தபோது அங்கு ஏராளமான கட்சித் தொண்டர்களும் குவிந்திருந்தனர்.

இளங்கோவன் முன்­னாள் தமி­ழக முதல்வரும் தற்­போ­தைய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான பழனி­சா­மிக்கு மிகவும் நெருக்­க­மா­ன­வர் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

2014ஆம் ஆண்டு ரூ.30 லட்­ச­மாக இருந்த இளங்­கோ­வ­னின் சொத்து மதிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.5.6 கோடி­யாக அதி­க­ரித்­தது. அதா­வது ரூ.3.78 கோடி அள­விற்கு 131% வரு­மா­னத்திற்கு அதி­க­மாக அவர் சொத்து சேர்த்­துள்­ள­தாக முதல் தக­வல் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இளங்­கோ­வன் பண மதிப்­பி­ழப்­பின் போது சேலம் கூட்­டு­றவு வங்கி மூலம் ரூ.600 கோடியை பணம் பரி­மாற்­றம் செய்ததாக­வும் சட்­ட­மன்­றத் தேர்­த­லின்போது ரூ.1,000 கோடியை இதன்மூலம் செலவு செய்­த­தும் கண்டுபிடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக இளங்­கோ­வன், அவ­ரது மகன் பிர­வீன்­கு­மார் மீது லஞ்ச தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப் பதியப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, அதி­முக முன்­னாள் சுகா­தா­ரத் துறை அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­க­ரின் உத­வி­யா­ளர், நண்­பர்களின் வீடு­களிலும் லஞ்ச ஒழிப்­புப் போலி­சார் நேற்று சோதனை நடத்­தி­னர்.

புதுக்­கோட்டை மாவட்­டம், இலுப்­பூ­ரில் உள்ள அமைச்­ச­ரின் வீடு உள்­ளிட்ட 43 இடங்­களில் கடந்த அக்­டோ­பர் 18ஆம் தேதி சோதனை நடந்தது. இதேபோல், நேற்­றும் சி.விஜ­ய­பாஸ்­க­ரின் உத­வி­யா­ளர் சர­வ­ணன் வீடு, நண்­பர் சந்­தி­ர­சே­க­ரின் நிறு­வ­னம், மற்­றொரு உத­வி­யா­ளர் முரு­க­னின் வீடு உள்­பட நான்கு இடங்­களில் சோதனை நடத்தி வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!