2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பொருள்கள் கண்டெடுப்பு

தென்­காசி: சுமார் இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய பழமை வாய்ந்த பொருள்­கள் பல வாசு­தே­வ­நல்­லூர் அருகே கண்­டெ­டுக்­கப்­பட்­டன. சாலை அமைக்க மண் எடுத்­த­போது அவை கிடைத்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தென்­காசி மாவட்­டம் வாசு­தே­வ­நல்­லூர் அருகே நடை­பெற்ற இந்­தச் சாலை அமைக்­கும் பணிக்­காக மண் எடுக்­கப்­பட்­டது. அப்­போது சுமார் நான்கு அடி ஆழத்­தில் உரு­ளைக் கற்­கள் கிடந்­தன. இது­குறித்து தக­வல் அறிந்து விரைந்து வந்த அதி­கா­ரி­கள், மீண்­டும் மண் எடுக்­கும் பணியைக் கவ­ன­மாக மேற்­கொண்­ட­னர்.

அப்­போது, பழங்­கால மண்­பாண்­டங்­கள், முது­மக்­கள் தாழி­கள், இரும்­பால் செய்­யப்­பட்ட வில், குத்­தீட்டி, வாள், கத்தி, செம்­பி­னால் செய்­யப்­பட்ட பாத்­தி­ரங்­கள் என ஏரா­ள­மான பொருள்­கள் அடுத்­த­டுத்து கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

அவை அனைத்­துமே சுமார் இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டவை எனக் கரு­தப்­ப­டு­வ­தாக குற்­றா­லம் தொல்­லி­யல் துறை அலு­வ­லர் ஹரி கோபா­ல­கி­ருஷ்­ணன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

"அனைத்­துப் பொருட்­களும் வேலை நுணுக்­கம் மிக்­க­வை­யாக உள்­ளன. இதன் மூலம் இப்­ப­கு­தி­யில் வாழ்ந்த மக்­க­ளின் நாக­ரிக வாழ்க்கை துல்­லி­ய­மாக வெளிப்­படு­கிறது. இங்கு விரி­வான ஆய்வு மேற்­கொள்­ளப்­படும்," என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!