திரையரங்கில் 100% இருக்கை பயன்பாட்டுக்கு அனுமதி

மேலும் பல கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமி­ழ­கத்­தில் நவம்­பர் 15ஆம் தேதி வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், பல்­வேறு தளர்­வு­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அதன்­படி, மாநி­லம் முழு­வ­தும் உள்ள அனைத்து திரை­ய­ரங்­கு­க­ளி­லும் நூறு விழுக்­காடு இருக்­கை­க­ளைப் பயன்­ப­டுத்த அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கூடு­தல் தளர்­வு­களை அறி­வித்த முதல்­வர் மு.க.ஸ்டா­லின், அனைத்து வகை கடை­கள், உண­வ­கங்­கள் இரவு 11 மணி வரை மட்­டுமே செயல்­பட வேண்­டும் என்ற கட்­டுப்­பாடு முடி­வுக்கு வரு­வ­தாக தெரி­வித்­துள்­ளார்.

மாநி­லத்­தில் தனித்து இயங்­கும் அனைத்து வகை மதுக்­கூ­டங்­களும் மீண்­டும் இயங்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்து பள்­ளி­க­ளி­லும் சுழற்சி முறை­யில் ஒன்று முதல் எட்­டாம் வகுப்­பு­கள் நடை­பெ­றும் என்று குறிப்­பிட்­டுள்ள முதல்­வர், கூட்ட அரங்­கு­களில் அனைத்து வகை­யான கலா­சார நிகழ்­வு­க­ளை­யும் நடத்­து­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­படு­வ­தாக தெரி­வித்­துள்­ளார்.

மேலும், விளை­யாட்டு அரங்­கு­களில் பயிற்சி, போட்­டி­களை நடத்­த­வும் அனு­மதி அளிக்­கப்­பட்டுள்­ள­து.

சிகிச்சை தேவை­க­ளுக்­காக நீச்­சல் குளங்­களைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றும் முதல்­வர் கூறி­யுள்­ளார்.

இது­போல் மேலும் சில தளர்­வு­க­ளை­யும் அரசு அறி­வித்­துள்­ளது.

திரை­ய­ரங்­கு­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்­டி­ருப்­பது திரைத்­து­றை­யி­ன­ருக்­கும் ரசி­கர்­க­ளுக்­கும் மகிழ்ச்சி அளித்­துள்­ளது.

பொது­மக்­கள் பண்­டிகை, சமு­தாய நிகழ்­வு­களில் கூட்­ட­மா­கக் கூடு­வதை தவிர்க்­கு­மா­றும் பொது இடங்­களில் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணிந்து சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்றி அர­சின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மா­றும் முதல்­வர் ஸ்டா­லின் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,140 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. 17 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். இதை­ய­டுத்து பலி எண்­ணிக்கை 36,004ஆக கூடி­யுள்­ளது. நேற்று முன்­தி­னம் 1,374 பேர் தொற்­றில் இருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் தடுப்­பூசி முகாம்­கள் மூலம் 2.3 மில்­லி­யன் பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.

மாநி­லம் முழு­வ­தும் 50,000 இடங்­களில் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­ட­தா­க­வும் தற்­போது அர­சின் கைவ­சம் 4.3 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். தமி­ழ­கத்­தில் 69 விழுக்­காட்­டி­னர் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். 29 விழுக்­காட்­டி­னர் இரண்டு தடுப்­பூ­சி­களும் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!