கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக கனகராஜ் அண்ணன் சிக்கினார் சாட்சியங்களை அழித்ததாக குற்றவாளிகள் இருவர் கைது

நீல­கிரி: கோட­நாடு கொலை, கொள்­ளைச் சம்­ப­வம் தொடர்­பாக வழக்கு விசா­ரணை நடை­பெற்று வரும் நிலை­யில், சாட்­சி­யங்­களை அழித்­த­தாக விபத்­தில் உயி­ரி­ழந்த கார் ஓட்­டு­நர் கன­க­ரா­ஜின் அண்ண னையும் அவ­ரது உற­வி­ன­ரை­யும் போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

நீல­கிரி மாவட்ட நீதி­மன்ற நீதி­பதி சஞ்­சய் பாபா, குற்­ற­வா­ளி­கள் இரு­வ­ரை­யும் அடுத்த நவம்­பர் மாதம் 8ஆம் தேதி வரை நீதி­மன்­றக் காவ­லில் வைக்க உத்­த­ர­விட்­டார்.

இதை­ய­டுத்து, கூட­லூர் சிறை­யில் அவர்­கள் அடைக்­கப்­பட்­ட­னர்.

முன்­ன­தாக, ஜெய­ல­லி­தா­வின் கார் ஓட்­டு­நர் கன­க­ராஜ் சாலை விபத்­தில் உயி­ரி­ழந்­த­தா­கக் கூறி வழக்கு முடிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு தன­பால், "இது­போல் நடந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. தம்­பி­யின் உயிரிழப்­பில் சந்­தே­கம் உள்­ளது," எனக் கூறி­யி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, கன­க­ராஜ் வழக்கை காவல்­து­றை­யி­னர் மறு விசா­ரணை செய்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், இவ்­வ­ழக்கு தொடர்­பான தட­யங்­களை அழித்த தாக சேலம், எடப்­பா­டி­யைச் சேர்ந்த கன­க­ரா­ஜின் அண்­ணன் தன­பால், 44, நெருங்­கிய உற­வி­ன­ரான சேலம், ஆத்­தூ­ரைச் சேர்ந்த ரமேஷ், 34, ஆகிய இருவரை­யும் உதகை தனிப்­படை போலி­சார் கைது செய்­துள்­ள­னர். விசா­ர­ணை­யின்போது அவர்­கள் இரு­வ­ரும் மாற்றி மாற்றி பேசியதா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்­பல் கோட­நாடு பங்­க­ளா­வில் கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்­டது. அப்­போது இரவு நேர காவ­லா­ளி­யாக இருந்த ஓம்­ப­க­தூர் கொலை செய்­யப்­பட்­டார். அத்­து­டன் பங்­க­ளா­வில் இருந்த பொருட்­களும் கொள்ளை அடிக்­கப்­பட்­டன.

இந்­தச் சம்­ப­வத்­திற்கு மூளை யாகச் செயல்­பட்­ட­ கன­க­ராஜுக்கும் அவரது அண்­ணன் தன­பா­லுக்­கும் ரமேஷுக்கும் தொடர்­புள்­ள­தா­கக் கூறி கைது செய்­துள்­ள­னர்.

கோட­நாடு கொள்­ளைச் சம்­ப­வம் நடை­பெ­றும் முன்பே இந்த ரக­சி­யம் தன­பால், ரமே­சுக்கு தெரிந்­தும் காவல்­து­றை­யி­ன­ரின் விசா­ர­ணை­யின்­போது தெரி­யாது என மறைத்­துள்­ள­னர்.

அதே­போல கன­க­ராஜ் உயி­ரி­ழந்த பிறகு அவ­ரது கைபே­சி­யில் பதி­வான ஆதா­ரங்­களை அழித்­துள்­ள­தா­க­வும் இவ்­வ­ழக்­கின் சில முக்­கிய சாட்­சி­க­ளைத் தனிப்­பட்ட முறை­யில் அணுகி விசா­ர­ணைக்கு அழைத்­தால் குறிப்­பிட்ட தக­வல்­களை மட்­டுமே சொல்­ல­வேண்­டு­ம் என கூறியதும் தெரி­ய­வந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!