புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துச் செல்ல வரும் வயதானவர்களைக் குறிவைத்து பணம் களவாடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கி ஏடிஎம்முக்கு வரும் வயதானவர்களைக் குறிவைத்து அவர்களுக்குப் பணம் எடுத்து தர உதவி செய்வது போல் நடித்து ஆடவர்கள் பணத்தை திருடிச் செல்வதாக புதுக்கோட்டை போலிசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, தனிப்படை போலிசார், 50 சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருச்சி, கோயம்புத்தூரில் பதுங்கி யிருந்த பீகாரைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.
இதேபோல், கடந்த 15ஆம் தேதி அன்று, சேலம் மாவட்டம், தாரா மங்கலத்தில் மூதாட்டியிடம் முகவரி கேட்பதுபோல் வந்த திருடன் ஒருவன், அவர் அணிந்திருந்த தங்கத்தோட்டை காதோடு கத்தி யால் அறுத்துச் சென்றான்.