சென்னை: இருளர் சமூக மாணவர்களின் கல்வி நலனுக்காகவும் அவர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறவும் முதல்வரிடம் ரூ.1 கோடி நிதியுதவியை நடிகர் சூர்யா நேற்று வழங்கினார்.
சூர்யாவின் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' படம் இன்று வெளியாகிறது. காலங்காலமாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு வரும் பழங்குடியின இருளர் மக்களின் வலி இப்படத்தில் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா தங்கள் 2-டி எண்டெர்ெடயின்மெண்ட் நிறுவனம் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
'ஜெய் பீம்' திரைப்படத்தை பார்த்த மு.க.ஸ்டாலின் சூர்யாவுக்கும் படக்குழுவுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்து, 'மனம் கனக்கிறது' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா, "வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்,'' என்று கூறியுள்ளார்.