நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடியை ஒட்டியுள்ள காடுகள் அரிய வகை வன விலங்குகளின் உறைவிடமாக இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.
"அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் விலங்கினங்களுக்கு ஆபத்து ஏற்படும். அவை அச்சத்தின் காரணமாக ஊருக்குள் வரவும் வாய்ப்புள்ளது. எனவே, பட்டாசு இன்றி பசுமைத் தீபாவளியைக் கொண்டாடுங்கள்," என அறிவுறுத்தியுள்ளனர்.
முதுமலைப் பகுதியில் உள்ள பொக்காபுரம், ஆச்சக்கரை உள்ளிட்ட பத்துக்கும் மேலான கிராம மக்களையும் பட்டாசுகளை வெடிக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான விழிப்புணர்வு கடிதங்களையும் வழங்கிவரும் வனத்துறையினர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.