சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப் பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், ஞாயிறன்று இரவு குணமடைந்து வீடு திரும்பினார்.
பழையபடி அதே உற்சாகம், ஸ்டைலுடன் அவர் நடந்து சென்ற தைக் கண்ட ரசிகர்கள் 'தலைவா, தலைவா' எனக் கூச்சலிட்டனர்.
இதைத்தொடர்ந்து, 'ஹூட்' செயலியில் புகைப்படத்துடன் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த், "அனைவருக்கும் வணக்கம். சிகிச்சை முடிந்து நான் நலமாக உள்ளேன். ஞாயிறு இரவுதான் வீட்டிற்கு வந்தேன். எனது ஆரோக்கியத்துக்காக பிராா்த்தனை செய்த அனைத்து நலம் விரும்பிகள், ரசிகப் பெருமக்கள், நண்பர்களுக்கும் என் மனமாா்ந்த நன்றி," எனத் தெரிவித்துள்ளார்.
இத்தகவலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், நேற்று அதிகாலையில் ரஜினி வீட்டிற்கு காவேரி மருத்துவமனை யின் மருத்துவக் குழுவினர் வந்து சென்றதாக ஏஷியாநெட் நியூஸ் ஊடகச் செய்தி குறிப்பிட்டிருந்தது.
"ரஜினியின் உடல்நலனை தினமும் பரிசோதிக்க வேண்டியது கட்டாயம். அதற்காகவே தாதியருடன் மருத்துவக் குழுவினர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்தனர். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது," எனத் தெரிவித்துள்ளனர்.