சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் 19 மாதங்களுக்குப் பின்னர் பயணம் மேற்கொள்ளும் விமானங்களின் எண்ணிக்கை 249ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், பயணிகளின் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவுக்கு 30,000 பேரைக் கடந்துள்ளது.
நேற்று சென்னையில் இருந்து 125 விமானங்கள் புறப்பட்டன. அதேபோல், 124 விமானங்கள் சென்னைக்கு வந்தன.
கோவை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூா் விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் குறைந்து வருவதை அடுத்து, கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் நாட்டிலுள்ள உள்நாட்டு விமான நிலையங்களில் 100% பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.