சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 121 அரசு பள்ளிக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை முதல்வர் வழங்கினார்.
ஒரு லட்சத்து, 5ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு 196 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் படுகிறது. இத்திட்டத்தின் தொடக்கமாக 13 பணியாளர்களுக்குரிய காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.