சென்னை: தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி முகாம் இந்த வாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 8வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே அறிவிப்பு வெளி யிட்டு இருந்த நிலையில், அது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. "தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 15 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகக் கூறப்படுவதால், தடுப்பூசி முகாம் நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது," என்றார்.
தடுப்பூசி முகாம் ரத்து ெசய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மக்களைத் தேடிச்சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும்.வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவர்கள் இத்திட்டத்தால் அதிகம் பயன் அடையலாம். தீபாவளி பண்டிகையையொட்டி தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்று பயம் கொள்பவர்களையும் கருத்தில்கொண்டு முகாம் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.