அரசாங்க வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஒரேநாளில் 58 வழக்குகள் பதிவு; 30 பேர் கைது

தஞ்சாவூர்: அர­சாங்க வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி பொது­மக்­களை ஏமாற்றி பணம் பறிப்­ப­வர்­கள் குறித்து மாநி­லம் முழு­வ­தும் போலி சார் நேற்று முன்தினம் விசா­ரணை நடத்­தி­னர்.

அப்­போது, ஒரே­நா­ளில் 58 பேர் மீது வழக்குப் பதிந்து, 30 பேரைக் கைது செய்து சிறை­யில் அடைத்த னர். இவர்­களில் 12 பேர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள்.

கைதா­ன­வர்­களில் சிலா், வங்­கி­கள், ரயில்வே நிலை­யம், சத்­து­ணவு மையங்­களில் அர­சாங்க வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி பண மோசடி செய்­துள்­ளனா்.

முன்­னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணி­ய­னின் உத­வி­யா­ள­ரான தஞ்­சா­வூ­ரைச் சோ்ந்த சேஷாத்­திரி, அதி­மு­க­வைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­சர் பரிதி இளம்­வ­ழு­தி­யின் மூன்­றா­வது மனைவி ராணி எலி­ச­பெத், 36, முன்­னாள் அமைச்­சர் செங்­கோட்­டை­ய­னி­டம் தனக்கு செல்­வாக்கு இருப்­ப­தா­கக் கூறி கல்­வித் துறை­யில் வேலை வாங்­கித் தரு­வ­தாக ஏமாற்­றிய ஹரி­நாத், தலை­மைச் செய­லக ஊழி­யர் கண்­ணன் ஆகியோா் கைதா­ன­வர்­களில் குறிப்­பி­டத்­தக்­க­வர்­கள் ஆவர்.

அரசு வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி அப்­பாவி மக்­க­ளி­டம் பணம் பறிக்­கும் கும்­பல் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கும்­படி முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தமி­ழக காவல்­துறை­யின் சட்­டம், ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்­தி­ர­பா­புக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.

இதையடுத்து, மாநி­லம்ேதாறும் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், 30 பேர் கைதாகி சிறை­யில் அ­டைக்­கப்பட்­ட­னர். இவர்­க­ளி­ட­மி­ருந்து முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் ெதரி­வித்­துள்­ளன.

இதே­போன்ற மற்­றொரு சம்­ப­வத்­தில் தமி­ழக காவல்­துறை, வனத்­துறை, நீதி­மன்­றங்­களில் வேலை வாங்­கித் தரு­வ­தாக போலி நிய­மன ஆணை­களை வழங்கி ரூ.5 கோடி மோசடி செய்த குற்­றச்­சாட்டு தொடர்­பில், ஓய்வுபெற்ற காவ­லர் உள்­பட இ்ருவர் கைதாகி­னர்.

முக்­கிய குற்­ற­வா­ளி­யான அதி­முக ஊராட்சி மன்­றத் தலை­வர் கும­ரே­சனைப் போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.

வேலூர், தஞ்­சா­வூர் உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளி­டம் காவல்­துறை, வனத்­துறை, நீதி­மன்­றத்­தில் வேலை கிடைத்­துள்­ள­தாக போலி பணி நிய­மன ஆணை­களை வழங்கி தலா ரூ.2 லட்­சம் முதல் ரூ.3 லட்­சம் வரை பணம் பறித்து உள்ளது தெரியவந்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!