திருச்சி: தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், இந்த மழை பாதிப்பால் தடுப்பூசி போடாமல் சாலையோரம் வசிக்கும் மக்களிடையே கொவிட்-19 கிருமித் தொற்று பரவும் அபாயம் அதிகம் நிலவுவதாக 'த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ெதருவோரம் வசிக்கும் மக்களி டம் எந்த ஓர் அடையாளச் சான்றிதழும் இல்லாததால் தடுப்பூசி போடுவதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இரவில் மழை பெய்தால், தாங்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஏதுவாக ஒரு நல்ல இடத்தை தேடி அலையும் சூழலும் உள்ளது.
அவர்களில் பலர் தடுப்பூசி போடாமலும் கொவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாமலும் கூட்டம் கூட்டமாக பாலத்தின் அடியிலோ அல்லது பேருந்து நிலையத்திலோ அல்லது மழையிலிருந்து தப்பிக்கும் இடங்களிலோ முகாமிட்டிருப்பது இத்தொற்று பரவுவது குறித்த கவலையை அதிகப்படுத்தி உள்ளது.
தென்னூரில் வசிக்கும் பி.என்.நடராஜன் கூறுகையில், "இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள்கூட கொவிட் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில், அவர்களில் பலரும் தடுப்பூசி போட்டிருப்பதால் சர்வ சாதாரணமாக உள்ளனர்.
"தடுப்பூசி கிருமித்தொற்றில் இருந்து அவர்களைப் பாதுகாக்கலாம். ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சாலையோரம் வசிக்கும் மக்களின் நிலைமை அப்படி அல்ல. எனவே, அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய அதிகாரிகள் சில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்," என்றார்.
"அடையாள அட்டைகள் இல்லாதது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. தெருவாசிகளுக்கு சில தற்காலிக ஆவணங்களை வழங்குவதன்மூலம் இந்தப் பிரச்சி னையை எங்களால் எளிதாக சமாளிக்க முடியும்.
"இருப்பினும், தடுப்பூசி போடுவதற்கு அவர்களைச் சம்மதிக்க வைப்பதே முக்கிய பிரச்சினையாக உள்ளது.
"அதுமட்டுமின்றி, அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்வதும் முக்கியம். பலர் ஒரே இடத்தில் தங்குவது அரிதாகவே இருப்பதால், அவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டு விடத் தேடுவதும் கடினமான பணியாக இருக்கும்," என்று சுகாதார அதிகாரி ஒருவர் விவரம் தெரி வித்துள்ளார்.
நிர்வாகம் இப்பிரச்சினைகளை சமாளிக்கவேண்டிய நிலையில், தெருவோர மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறு இருப்பினும், குறைந்தபட்சம் ஊசி போடத் தயாராக இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி ெசய்யத் தவறியது ஏன் என்பது தெளிவாக குறிப்பிடப் படவில்லை.
"நாங்கள் நோய்த்தொற்று ஏற்பட்டால் மிகவும் போராடுவோம். எனக்கு மது, புகையிலைப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அதனால் தடுப்பூசி ஏதாவது பிரச்சினை கொடுத்துவிடுமோ என்ற பயம் எனக்கு உள்ளது.
"இருப்பினும், என்னிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதபோது அதை எப்படிப் பெறுவது?" என ஸ்ரீரங்கத்தில் தெருவோரம் வசிக்கும் பழனி, 50, வினவினார்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு இதுகுறித்து கூறியபோது, "வரும் வாரத்தில் தெருவோர மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை நிர்வாகம் மேற்கொள்ளும்," என்றார்.