சென்னை: மழைக்கால நோய்களான சளி, இருமல், குளிர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அரிப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து சிகிச்சை அளித்து, நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
அழைப்பு கிடைத்தவுடன் சேவை வழங்கிடும் வகையில் அவசர சிகிச்சை வாகனங்கள் செயல்படுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், தமிழகத்தில் 416 நடமாடும் மருத்துவக் குழுவினரும் 770 ஜீப் வாகன மருத்துவக் குழுவினரும் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாகச் செல்ல தயாராகி உள்ளதாகக் கூறினார்.
நோய் எதிா்ப்பு மருந்துகள், பாம்புக் கடிக்கான எதிா்ப்பு மருந்துகள், பூச்சிக்கடி தடுப்பு மருந்து கள் கையிருப்பில் உள்ளதாகக் கூறியவர், அனைத்து மருத்துவமனை வளாகங்களிலும் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.