ஒன்பது பேரன் பேத்தியை வளர்த்து ஆளாக்கும் பாட்டிக்கு வீடு கட்டித் தர முதல்வர் உத்தரவு

புதுக்­கோட்டை: 2018ல் வீசிய 'கஜா' புய­லின் கோரத் தாண்­ட­வத்­தால் இவ­ரது குடிசை வீடு முழு­மை­யாக சேத­ம­டைந்­ததை அடுத்து, இப்போது பிளாஸ்­டிக் பைக­ளால் ஒட்டுப் போடப்­பட்­ட வீட்டில் தவித்து வரும் 76 வயது மூதாட்­டிக்கு அரசு சார்­பில் வீடு கட்­டித்­தர முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

புதுக்­கோட்டை மாவட்­டம், ஆலங்­குடி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நக­ரைச் சேர்ந்­த­வர் மூதாட்டி லோகாம்­பாள். கண­வர் இறந்துவிட்­டார்.

மாடு விற்பனை தரகரான மூத்த மகன் கருப்­பையா, 50, எந்த ஒரு பிைழப்­புக்­கும் போகா­மல் தின­மும் மது­வி­லேயே காலத்தை தள்ளி வருகிறார்.

கருப்­பையா­வின் மனைவி தேவி 10வது பிர­ச­வத்­தில் குழந்­தை­யு­டன் இறந்­து­போக, கருப்­பை­யா­வின் 5 முதல் 20 வய­தி­லான ஒன்­பது பிள்ளைகளையும் லோகாம்­பாள்தான் கவ­னித்துவந்­தார்.

இவர்­களில் கூலி வேலை செய்து, ஒரு பேத்தி, ஒரு பேர­னுக்குத் திரு­ம­ணம் செய்துவைத்த லோகாம்­பாள், மற்ற ஏழு பேரைக் கவ­னித்து வரு­கி­றார்.

கொரோனா காரணமாக தனது கூலி வேலையும் கைவிட்டுப்போன நிலையில், பேரன், பேத்திகளுடன் தற்போது பெய்யும் கனமழையில் ஒழுகும் வீட்டில் உணவு கிடைக்கா மல் முடங்கினார்.

இந்தச் செய்தி 'தின­ம­லர்' நாளி­த­ழில் வெளி­யா­னதைத் தொடர்ந்து, முதல்­வர் ஸ்டா­லின் மூதாட்­டிக்கு உட­ன­டி­யாக வீடு கட்­டித்­தர உத்­த­ர­விட்டுள்ளார்.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் புதிய வீடு கட்டித் தரவும் மாதந்­தோ­றும் முதி­யோர் உத­வித்தொகை வழங்க வும் அர­சா­ணை­­ வழங்­கப்பட்ட தாகவும் அதன்பின்னர், அர­சா­ணை யைக் கொடுத்தவர்களே வீடு கட் டும் உத்தரவை பறித்­துச் சென்றதாக வும் முதி­யோர் உத­வித்­தொகை மட்­டும் தொடர்ந்து வழங்­கப்­பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!