தி.மலை: கணவர் உயிரிழந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் தாங்க இயலாமல் மனைவியும் சில மணி நேரங்களில் இறந்துபோன சம்பவம் திருவண்ணாமலையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
படைவீடு அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (63 வயது). மண்பாண்ட தொழிலாளியான இவர், அண்மையில் உடல்நலம் குன்றியதால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கணவர் இறந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த சேகரின் மனைவி கண்ணகி, திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரும் சிகிச்சை பலனின்றி காலமானார். 30 ஆண்டுகள் இணக்கமாக இருந்த இத்தம்பதியரின் மறைவு ராமநாதபுரம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.