சென்னை: கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக ரூ.311 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் எதுவுமே நடைபெறவில்லை எனும் புகார் எழுந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் தொகை படிப்படியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் வடிகாலாகவே பார்க்கப்பட்டு வந்த கூவத்தில் மீண்டும் நல்ல நீரோட்டத்தை ஏற்படுத்த கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை.
ரூ.311 கோடியை முறையாகச் செலவிட்டிருந்தால், சென்னையை இப்போது வெள்ளம் மூழ்கடித்திருக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.
கூவத்தில் தூர்வாரும் பணிகளுக்காக மட்டுமே சுமார் நூறு கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.