சிவகாசி: வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து, 24, என்பவர் தன் உறவினர் பெண் ஒருவரை மணம் புரிய ஆசைப்பட்டு ஏமாற்றம் அடைந்தார்.
அதனால் வேறு ஒரு பெண்ணை திருமணம் புரிந்தார். அந்தப் பெண் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு மாரிமுத்துவைக் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டார்.
அதையடுத்து மாரிமுத்து தான் முதலில் விரும்பிய உறவுப் பெண்ணைத் தனக்கு மணம் புரிந்து வைக்கும்படி மறுபடியும் கேட்டார். இருந்தாலும் பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை.
அதனை அடுத்து மாரிமுத்து வேறு ஒரு பெண்ணை 2வது மனைவியாக மணந்தார். அவரும் மாரிமுத்துவை விட்டு ஓடிவிட்டார்.
இதனால் மீண்டும் உறவுப் பெண்ணை மணமுடிக்க முயன்று மாரிமுத்து தோற்றார்.
அதேவேளையில், அந்த உறவுப் பெண்ணை செல்வகணேஷ், 21, என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்க பெண் வீட்டார் முடிவு செய்ததை அறிந்து செல்வகணேஷை தாக்கி தீவைத்து அவரை மாரிமுத்து கொன்றுவிட்டார்.
இதை அவரே போலிசிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார். புது மாப்பிள்ளையைக் கொன்றுவிட்டால் மணப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரமாட்டார்கள், தானே திருமணம் செய்துகொள்ளலாம் என்பதற்காக மணமகனைக் கொன்றதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்கிறது.