சென்னை: கடற்கரைப் பகுதிகளில், உள்ளூர் மக்கள் தங்கள் தேவைக்கு மணல் எடுக்க அனுமதிக்கும் வகையில், கடலோர ஒழுங்கு முறை விதிகளில் வரைவு திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒழுங்குமுறை மண்டல விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த விதிகளில் சில மாற்றங்களைச் செய்ய மத்திய காடு, சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயாராகி உள்ளது.
உள்ளூர் மக்கள், தங்கள் தேவைக்காக மணல் எடுப்பது முதல் படகுகளைப் பயன் படுத்தி மணல் எடுப்பது வரை இதில் அனுமதிக்கப் படும் என்று தெரிகிறது.
அறிக்கை தொடர்பில் ஆட்சேபம் இருப்பின், 60 நாட்களுக்குள் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.