சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.
மொத்தம் 1.25 லட்சம் ஏக்கர் பயிர் சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும் டெல்டா மாவட்டங்களுக்குச் செல்ல அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ள தாகவும் தமிழக அரசு தெரிவித்தது.