சென்னை: புயல் மற்றும் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு முதற்கட்டமாக குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி நிதி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை, வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகியவை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைக் கடந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதை அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் சேதங்களைச் சரி செய்யவும் பெருந்தொகை தேவைப்படுகிறது.
"தமிழக அரசிடம் உள்ள பேரிடர் நிவாரண நிதி அதற்குப் போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை.
"தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மழை ஓய்ந்த பின்னர் அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்," என்றும் மருத்துவர் ராமதாஸ் கோரியுள்ளார்.