சென்னை: சென்னையில் மழைநீர் தேக்கத்தால் மக்கள் கடும் அவதிப்படுவதற்கு திமுக அரசே முக்கிய காரணம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னையின் டி.நகர், மயிலாப்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டபின் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளை நான் பார்வையிட்டேன். அப்பொழுது நான்கு இடங்களில் தான் மின் மோட்டார்களை வைத்து தேங்கியுள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். மற்ற எந்த இடத்திலும் நீரை வெளியேற்றும் பணி நடைபெறவில்லை. முதல்வர் தொகுதியான கொளத்தூரிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்துள்ளது. கொளத்தூர் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சார வசதி இல்லை. பால், சாப்பாடு கிடைக்காத அவல நிலை உள்ளது.
"சென்னையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே முக்கிய காரணம்," என்று சாடினார்.
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். "இத்தனை நாளாக கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இப்ேபாது கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையின் பல பகுதி களிலும் அரசு முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறும் முதல்வர், ஆதாரத் துடன் பேசவேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து, வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்," என்றார்.