சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதர் வெங்கடேஸ்வரன் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்தும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அண்மையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையின் சுற்றுக்காவல் கப்பல் மோதியதில், கடலில் விழுந்து தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்ப தாகவும் மீனவரின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் கூறியுள்ள அவரது மனைவி, இது குறித்து விசாரிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து, இறந்த மீனவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.