சென்னை: மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம் என வேளாண் சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, "மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சட்டத்தை ரத்து செய்வதற்கான செயல்முறையை நிறைவேற்றுவோம்," என்று நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி," என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
வைகோ: மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை உணர்ந்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.
தொல்.திருமாவளவன்: மத்திய அரசு தாமதமாக முடிவு எடுத் திருந்தாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.
கே.பாலகிருஷ்ணன்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இது தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்: விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளார்.