கிருஷ்ணகிரி: சசிகலாவை அதிமுகவுடன் இணைப்பது பற்றி தலைவர்களோ, நிர்வாகிகளோ ஒன்றரை கோடி தொண்டர்களோ யாரும் நினைக்கவில்லை. ஆனால், ஊடகங்கள்தான் அவ்வாறு நினைக்கின்றன. நாங்கள் சசிகலாவை மறந்ததுபோல் ஊடகங்களும் மறந்துவிட வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ெதரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சசிகலா சிறிது காலம் தொலைபேசி வழி பேசி வந்தார். இப்போது கல்வெட்டு மூலமாக பேசி வருகிறார். சசிகலாவுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. அவருக்கு ஜெயலலிதா மீது உண்மை யிலேயே பற்றும் பாசமும் இருந்தால் கழக இயக்கத்தை வாழ்த்திவிட்டு ஒதுங்கிக் கொள்ளவேண்டும்," என்று கூறியுள்ளார்.