100 அடி ஆழக் கிணற்றில் 85 வயது பாப்பா பாட்டி நீச்சல்

ராசி­பு­ரம்: நாமக்­கல் மாவட்­டம், ராசி­பு­ரம் அருகே உள்ள தங்கச்சாலை­யில் வசித்து வரும் பாப்பா என்ற 85 வயது மூதாட்டி நூறு அடி ஆழக் கிணற்­றில் சிறி­தும் அச்­ச­மின்றி குதித்து நீச்சலடிக்­கும் காட்­சி­கள் இணை­யத்­தில் பரவி வருகின்­றன.

தனது முது­மையை ஒரு பொருட்­டாகவே நினைக்­கா­த பாப்பா, கிணற்­றில் குதித்து நீச்­சல் அடிப்­பதை அப்­ப­குதி மக்­கள் வியந்து ரசிப்­ப­தோடு, தங்­க­ளுக்கு நீச்­சல் பழகித் தந்­த­வரே அவர்­தான் என்றும் பாராட்டு­கின்­ற­னர்.

“என் அப்­பா­வி­டம் இருந்து கற்ற அனைத்து வகையான நீச்­ச­லை­யும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். ஆபத்­துக்கு உதவும் இந்த நீச்­சல் கலையை அனை­வரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்,” என­வும் பாப்பா பாட்டி தெரி­வித்­துள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!