தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்று இல்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: வதந்திகளை நம்பவேண்டாம்

சென்னை: தமி­ழ­கத்­தில் இது­வரை ஓமிக்­ரான் தொற்று பதி­வா­க­வில்லை என்று மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை டிஎம்­எஸ் வளா­கத்­தில் நேற்று காலை அமைச்­சர் மா சுப்­பி­ர­ம­ணி­ய­னும் சுகா­தா­ரத் துறை செய­லா­ளர் ஜெ.ராதா­கி­ருஷ்­ண­னும் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.

அப்­போது பேசிய மா சுப்­பி­ர­

ம­ணி­யன், "தமிழ்­நாட்­டில் இது­வரை ஓமிக்­ரான் தொற்­றுப் பர­வல் இல்லை. அப்­படி ஒரு­வேளை யாருக்­கும் தொற்று உறு­தி­யா­னால் அதை அரசு வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­கும். இதில் மறைப்­ப­தற்கு எது­வு­மில்லை. ஒரு­வ­ருக்கு ஒமிக்­ரான் தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக சமூ­க­

வ­லைத்­த­ளங்­களில் பரப்­ப­ப்படும் தக­வல்­கள் முற்­றி­லும் தவ­றா­னவை. பொறுப்­பற்ற முறை­யில் கருத்­து­

க­ளைத் தெரி­விக்­க­வேண்­டாம்.

"ஓமிக்­ரான் குறித்து பொது­மக்­கள் பீதி­ய­டைய வேண்­டாம். முகக் ­க­வ­சம் அணி­வது, கைக­ளைச் சுத்­த­மாக வைத்­துக்­கொள்­வது, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது போன்­ற­வற்றை அனை­வ­ரும் தவ­றா­மல் பின்­பற்ற வேண்­டும்.

"ஓமிக்­ரான் தொற்­றுப் பர­வல் ஆபத்து அதி­க­முள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு முழு­மை­யா­கப் பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­கிறது. பரி­சோ­தனை முடிவு வரும்­வரை அவர்­கள் விமான நிலை­யத்­தில் தங்­க­வைக்­கப்­ப­டு­கி­றார்­கள். யாருக்­கா­வது தொற்று உறுதி செய்­யப்­பட்­டால் அவர்­கள் அரசு மருத்­து­வ­ம­னை­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஓமிக்­ரான் சிறப்பு வார்­டு­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

"இதற்­காக, மதுரை, திருச்சி, கோவை அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும், சென்­னை­யில் கிங் இன்ஸ்­டிட்­யூட், ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­மனை, ஓமந்­தூ­ரார் பல்­நோக்கு மருத்­து­வ­ம­னை­களில் சிறப்பு வார்­டு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஒவ்­வொரு வார்­டி­லும் தலா 40 படுக்­கை­கள் தயார் செய்­யப்­பட்­டுள்­ளன. உயிர்­வாயு வசதி உள்­ளிட்ட அனைத்­தும் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன," என்றார் அமைச்சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!