காண்ேபாரை நெகிழவைத்த செல்லத்தின் வளைகாப்பு

மதுரை: தனது வளர்ப்பு நாய்க்கு பெண்­க­ளுக்குச் செய்­யும் முறை­யி­லேயே வளை­காப்பு விழாவை நடத்தி, ஊர் மக்­க­ளைக் கூட்டி விருந்­தும் வைத்­துள்­ளார் காவல் உதவி ஆய்­வா­ளர் ஒரு­வர்.

இந்­தக் காணொளிக் காட்­சி­கள் சமூக வலைத்­த­ளங்­களில் அதி­கம் பகி­ரப்­பட்டு, காண்­போரை நெகிழச் செய்துள்ளது.

மதுரை ஜெய்­ஹிந்த்­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சக்­தி­வேல். மதுரை மாந­கர காவல்­து­றை­யில் உதவி ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

இவர், தனது வீட்­டில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக சிகப்பி, சுஜி என்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வரு­கி­றார்.

சுஜி கர்ப்­பி­ணி­யாக இருந்த நிலை­யில், குடும்­பத்­தி­ன­ரோடு, அரு­கில் வசிப்­ப­வர்­க­ளை­யும் அழைத்து தட­பு­ட­லாக வளை­காப்பு நிகழ்ச்­சியை நடத்தி உள்­ளார். வளை­காப்­பின்­போது சுஜிக்கு வளை­யல்­கள் அணி­வித்­தும் மாலை அணி­வித்­தும் ஒரு பெண்­ணுக்கு வளை­காப்பு நடத்­து­வது போல நிகழ்ச்­சியை நடத்தி உள்­ளார். மேலும் ஐந்து வகை உணவு­க­ளைத் தயார் செய்து சுஜிக்கு அளித்­த­தோடு, வளை­காப்பு நிகழ்வுக்கு வந்த அனை­வ­ருக்­கும் விருந்­தும் வைத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!