டிடிவி தினகரன் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு

சென்னை: ஜெய­ல­லிதா நினை­வி­டத்­தில் அஞ்­சலி செலுத்­தி­விட்டு முன்­னாள் முதல்­வர்­கள் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் ஓ.பன்­னீர்­செல்­வ­மும் நேற்று முன்­தி­னம் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது, அவர்­க­ளது கார்­மீது அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­க­ர­னின் தூண்­டு­த­லின் பேரில் அவ­ரது தொண்­டர்­கள் கால­ணியை வீசி தாக்­கி­ய­தாக மாறன் என்ற அதி­முக நிர்­வாகி அண்­ணா­ ச­துக்­கம் காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்­துள்­ளார்.

இந்­தப் புகாரை அடுத்து, டிடிவி தின­க­ரன் மீது நான்கு பிரி­வு­களில் வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

இதற்­கி­டையே, தின­க­ரன் வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில், "எடப்­பாடி பழ­னி­சாமி உள்­ளிட்­டோர் போல கட்­சி­யி­னு­டைய தலைமை அலு­வ­ல­கத்­தி­லேயே குண்­டர்­களை ஏவி கட்­சித் தொண்­டர்­க­ளைத் தாக்­கும் எண்­ணம் எங்­க­ளுக்கு கிடை­யாது," என்று கூறி­யுள்ள டிடிவி தின­க­ரன், "அம­முக ஜன­நா­யக ரீதி­யாக அர­சி­யலை எதிர்­கொள்­ளுமே தவிர, வன்­மு­றை­யில் அதற்கு துளி­யும் நம்­பிக்கை கிடை­யாது.

"ஜெய­ல­லிதா நினை­வி­டத்­தில் பாது­காப்பு ஏற்­பா­டு­களைச் செய்த காவல்துறைக்கே இந்த உண்மை தெரி­யும்," என்று தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!