நிலத்தை மீட்டுத் தரும்படி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய இரும்பு வியாபாரி

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் நேற்று மக்­கள் குறை தீர்க்­கும் கூட்­டம் நடந்து கொண்­டி­ருந்­தது. அப்­போது, தனது மனைவி தன­லட்­சுமி, மக­னு­டன் அங்கு வந்த சக்­தி­வேல் என்­ப­வர் தனது நிலத்தை மீட்­டுத் தரு­வ­தற்கு ஆட்­சி­யர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று ஆவே­ச­மாக சத்­தம் போட்­டார்.

இல்­லை­யேல், இந்த உயிர் எனக்கு வேண்­டாம் என்று தான் கொண்டு வந்­தி­ருந்த மண்­ணெண்­ணெய்யை தன் மீது ஊற்­றிக்­கொண்­டார்.

இதைத்­தொ­டர்ந்து, அங்கு பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்த போலி­சார் பத­றி­ய­டித்து ஓடி­வந்து அவ­ரி­ட­மி­ருந்த பாட்­டி­லைப் பிடுங்கி தண்­ணீரை அவர் மீது தெளித்து சக்­தி­வே­லி­டம் சமா­தா­ன­மா­கப் பேசி அவ­ரது கோபத்தைத் தணித்­த­னர்.

இது­கு­றித்து சக்­தி­வேல், 55, கூறு­கை­யில், நான் பழைய இரும்­பு­களை வியா­பா­ரம் செய்து வரு­கி­றேன். எனக்கு பவானி, காலிங்­க­ரா­யன் பாளை­யம் ஆற்­றுப்­ப­குதி ஒர­மாக 6 சென்ட் நிலம் உள்­ளது.

அந்த நிலத்­தில் சொந்த வீடு கட்டி வரு­கி­றேன். ஆனால், வீட்­டைக் கட்டி முடிப்­ப­தற்கு போது­மான பணம் இல்­லா­த­தால் வீடு கட்­டும் தர­கர் ஒரு­வ­ரி­டம் எனது நிலத்தை கிரை­யம் செய்து கொடுத்­து­விட்டு ரூ.3 லட்­சத்து 80 ஆயி­ரம் பணம் கட­னா­கப் பெற்று வீடு கட்­டி­னோம்.

இன்­னும் மூன்று மாதத்­தில் உங்­கள் பணத்­தைத் திருப்­பித் தந்து விடு­கி­றோம். எனது நிலத்தை எனது பெய­ரி­லேயே கிரை­யம் செய்து கொடுத்­து­வி­டுங்­கள் என்று அவ­ரி­டம் கூறி­னோம்.

ஆனால், அவர் எனது கோரிக்­கையை செவி­ம­டுக்­கா­மல் ஏமாற்றி வரு­கி­றார். இதுதொடர்­பாக ஏற் கெனவே காவல்நிலை­யத்­தில் புகார் செய்­துள்­ளோம். வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. எனது நிலத்தை எனது பெய­ரில் மாற்றிக் கொடுக்க ஆட்சியர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­று கோரினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!