மாணவர் மரணம்: நீதியை நிலைநாட்ட கமல் வலியுறுத்து

ராமநாதபுரம்: காவல்­து­றை­யி­ன­ரால் விசா­ர­ணைக்­காக அழைத்­துச் செல்­லப்­பட்ட மாண­வர் உயி­ரி­ழந்­த­தால் ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் முது­கு­ளத்­தூர் பகு­தி­யில் பதற்­றம் நில­வு­கிறது.

மணி­கண்­டன் என்ற அம்­மா­ண­வரை காவல்­து­றை­யி­னர் அடித்துக் கொன்­று­விட்­ட­தாக அவ­ரது குடும்­பத்­தா­ரும் உற­வி­னர்­களும் குற்­றம்­சாட்டி உள்­ள­னர்.

நீர்­கோ­ழிந்­தல் கிரா­மத்­தைச் சேர்ந்த 21 வய­தான மணி­கண்­டன் கல்­லூ­ரி­யில் படித்து வந்­தார். அண்­மை­யில் அவர் பரமக்­குடி சாலை­யில் இரு­சக்­கர வாகனத்­தில் சென்றுகொண்­டி­ருந்­த­போது, காவல்­து­றை­யி­னர் வாகன சோத­னை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். ஆனால் மணி­கண்­டன் தன் வாக­னத்தை நிறுத்­தா­மல் வேக­மா­கச் சென்­று­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து அவரை விரட்­டிப்­பி­டித்த காவல்­து­றை­யி­னர், அவ­ரது வாக­னம், கைபே­சி­யைப் பறி­மு­தல் செய்து, பின்­னர் அவ­ரது குடும்­பத்­தா­ருக்­கும் தக­வல் தெரி­வித்­தனர்.

காவல் நிலை­யத்­தில் வைத்து விசா­ரிக்­கப்­பட்ட நிலை­யில், தக­வல் அறிந்து அங்கு வந்த தனது குடும்­பத்­தா­ரு­டன் வீடு திரும்­பி­னார் மணி­கண்­டன். எனி­னும் சிறிது நேரத்­தில் திடீர் உடல்­நலக்­கு­றைவு ஏற்­பட்டு அங்­கே­யே மயங்கி ­வி­ழுந்து உயி­ரி­ழந்­தார்.

உடற்­கூ­ராய்­வுக்­குப் பின்­னர் மணி­கண்­ட­னின் உடலை வாங்க மறுத்­த­து­டன் காவல்­து­றை­யி­னர் மீது நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­னர். மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் கார்த்­திக் கூறு­கை­யில், மணி­கண்­டனை காவ­லர்­கள் யாரும் தாக்­க­வில்லை என்­றார்.

மாண­வ­ரின் திடீர் மர­ணம் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை, அம­முக பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன், மக்­கள் நீதி மய்­யம் கட்­சித் தலை­வர் கமல்­ஹா­சன் உள்­ளிட்­டோர் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என கமல்­ஹா­சன் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!