விவேக நகர திட்டம்: புதுப்பிக்கப்பட்ட மூன்று பேருந்து நிலையங்கள் திறப்பு

சென்னை: தமிழக அரசின் விவேக நகரங்கள் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வசதி மூலம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்தபடி மதுரை, நெல்லை, தஞ்சையில் உள்ள பேருந்து நிலையங்களைத் திறந்து வைத்தார்.

மாநி­லம் முழு­வ­தும் உள்ள பல்­வேறு பேருந்து நிலை­யங்­க­ளின் தரத்தை உயர்த்­தும் பணி கடந்த ஆண்டு தொடங்­கி­யது. முதற்­கட்­ட­மாக மதுரை, நெல்லை, தஞ்சை பேருந்து நிலை­யங்­க­ளைப் புதுப்­பிப்­ப­தற்­கான பணி­கள் தொடங்­கின. அந்­தப் பணி­கள் அண்­மை­யில் முடி­வ­டைந்­ததை அடுத்து, அப்­பே­ருந்து நிலை­யங்­கள் நேற்று திறக்­கப்­பட்டு, வழக்­கம்­போல் இயங்­கத் தொடங்கி உள்­ளன.

நெல்­லை­யில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேருந்து நிலை­யத்தைப் புதுப்­பிக்­கும் பணி ரூ.48 கோடி மதிப்­பீட்­டில் தொடங்­கி­யது.

அங்கு ஏற்­கெ­னவே இருந்த நான்கு நடை­மே­டை­க­ளு­டன் மேலும் இரண்டு புதிய நடை­மே­டை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. நெல்லை மாந­க­ராட்சி சார்­பில் புதுப்­பிக்­கப்­பட்ட பாளை­யங்­கோட்டை பேருந்து நிலை­யத்­தை­யும் முதல்­வர் நேற்று திறந்து வைத்­தார்.

மேலும், அப்­பகுதி­யில் மிதி­வண்­டி­க­ளுக்கு என தனிச்­சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது. அது­வும் நேற்று திறப்பு விழா கண்­டது.

தஞ்சை மாவட்­டத்­தில் உள்ள சிவ­கங்கை பூங்கா, அய்­யன்­குளம், சாமந்­தான்­கு­ளம் உள்­ளிட்ட பகு­தி­களில் விவேக நக­ரங்­கள் திட்­டத்­தின் கீழ் 16 பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அவற்­றுள் பழைய பேருந்து நிலை­யம் இடிக்­கப்­பட்டு 13,469 சது­ர­மீட்­டர் பரப்­ப­ள­வில், ரூ.15.49 கோடி மதிப்­பீட்­டில் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளது.

புதுப்­பிக்­க­ப்­பட்­டுள்ள பேருந்து நிலை­யங்­களில் பய­ணி­க­ளுக்கு குடி­நீர், ஓய்­வறை உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­கள் உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!