கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு; ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால் விபத்து ேநர்ந்ததாக தகவல் முப்படைத் தளபதிக்கு இன்று டெல்லியில் இறுதிச் சடங்கு

புது­டெல்லி: ஹெலி­காப்­டர் விபத்­தில் உயி­ரி­ழந்த முப்­ப­டை­க­ளின் தலை­மைத் தள­பதி பிபின் ராவத், அவ­ரது மனைவி மது­லிகா ராவத் உள்­ளிட்ட 13 பேரின் உடல்­கள் ராணுவ விமா­னம் மூலம் நேற்று தலை­ந­கர் டெல்­லிக்கு கொண்டு செல்­லப்­பட்­டன.

அங்கு பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி, ராணுவ அமைச்­சர் ராஜ்­நாத் சிங், மத்­திய அமைச்­சர்­கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்­சலி செலுத்தினர்.

இதைத் ­தொ­டர்ந்து, பிபின் ராவத், அவ­ரது மனை­வி­யின் உடல்­கள் இன்று காலை 11 முதல் மதி­யம் 2 மணி வரை பொது­மக்­கள் அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக அவர்­க­ளது இல்­லத்­தில் வைக்­கப்­ப­டு­கிறது.

அதன் ­பி­றகு, டெல்லி கண்­டோன்­மென்ட்­டில் இறு­திச்­ச­டங்­கு­கள் நடை­பெற உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இதற்­கி­டையே, இந்த விபத்து தொடர்­பாக மக்களவையில் நேற்று விளக்­கம் அளித்த பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங், "ஹெலிகாப்டர் வெலிங்டனை அடைவதற்கு 12 நிமிடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியுள்ளது.

"ராணுவத்தின் முப்படைகள் சார்பில் விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

"பிபின் ராவத் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) முழு அரசு மரியாதையுடன் நடைபெறும். அதேபோல் மற்ற வீரர்களின் இறுதிச் சடங்குகளும் ராணுவ மரியாதையுடன் நடைபெறும்," என்று தெரிவித்தார்.

நீல­கிரி மாவட்­டம், குன்­னூர் அருகே காட்­டேரிப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலி­காப்­டர் தீப்­பி­டித்து வெடித்­துச் சித­றி­யது.

இதில் பய­ணம் செய்த 14 ராணுவ வீரர்­களில் 13 பேர் உடல் கருகி உயி­ரி­ழந்­த­னர். ஒரு கேப்­டன் மட்­டும் 80% தீக்­கா­யங்­க­ளு­டன் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

இந்­தக் கோர விபத்து நாடு முழு­வ­தும் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்­நி­லை­யில், தட­யவி­யல் நிபு­ணர்­களும் ராணுவ அதி­கா­ரி­களும் நடத்­திய தேடு­தல் வேட்­டை­யில் ஹெலி­காப்­ட­ரின் கறுப்­புப் பெட்டி ேநற்று கண்டெடுக்­கப்­பட்­ட­து.

இந்த கறுப்­புப் பெட்­டியை டெல்லி அல்­லது பெங்­க­ளூர் கொண்­டு­சென்று ஆய்வு செய்­ய­ உள்ள­னர்.

முன்­ன­தாக, வெலிங்­டன் பயிற்சிக் கல்­லூரி மைதா­னத்­தில் வீரர்களின் உடல்களுக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின், கடல், விமா­னம், ராணு­வம் ஆகிய முப்­படைத் தள­ப­தி­கள் இறுதி அஞ்சலி செலுத்­தி­னர்.

அதன்­பின் தனித்­தனி ராணுவ வாக­னங்­களில் வீரர்­க­ளின் உடல்­கள் சூலூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தனி விமா­னம் மூலம் டெல்லி கொண்டு செல்­லப்­பட்­டது.

தாழ்வாக பறந்ததால் விபத்து

இந்­நி­லை­யில் ஹெலி­காப்­டர் தாழ்­வாகப் பறந்ததே விபத்­திற்கு கார­ணம் என காவல்­துறை அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தாக தி இந்து ஆங்­கில நாளேடு தெரிவித்து உள்ளது. ­

ஹெலி­காப்­டர் கீழே விழுந்­ததை நேரில் பார்த்த ஒரு­வரை மேற்­கோள் காட்டி, வானிலை மேக­மூட்­ட­மாக இல்லை என்று விபத்து நடந்த இடத்தைப் பார்­வை­யிட்ட மற்­றொரு காவல்துறை அதி­காரி கூறி­யுள்­ளார்.

அத்­து­டன், விபத்து நடந்த இடத்­திற்கு அரு­கில் வசிக்­கும் ஒரு­வர், ஹெலி­காப்­டர் மிகக் குறைந்த உய­ரத்­தில் பறந்ததைக் கண்­ட­தா­கவும் கூறி­யுள்­ளார்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் மேக­மூட்­டமே விபத்­துக்குக் கார­ணம் எனக் கூறப்­படும் வேளை­யில், போலி­சா­ரின் இத்­த­கைய பேட்டி குழப்பம் அளிப்­ப­தாக உள்­ளது.

விமா­னத்­தின் கறுப்புப் பெட்டி ஆய்வுக்குப் பிறகே, விபத்­திற்­கான கார­ணம் முழு­மை­யா­கத் தெரி­ய­வரும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!