பேருந்து நடத்துநருக்குக் கத்திக்குத்து; இளையர்கள் கைது

தாங்கள் சொல்லும் இடத்திற்கு அரசுப் பேருந்தை  இயக்காதததால், ஆத்திரமடைந்த  மூன்று இளையர்கள் நடத்துநரைக் கத்தியால் குத்தினர். 

அவர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். 

கோவை மாவட்டம், சிங்காநல்லுாரில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு பயணத்தை முடித்துவிட்டு பேருந்துகளை நிறுத்திவைக்கும் ஒண்டிப்புதுார் பேருந்துக் கிடங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

அதில், ஓட்டுநர் முருகவேல், 40, நடத்துநர் கவியரசன், 34, ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

அப்போது, வழியில் மூன்று இளையர்கள் பேருந்தில் ஏறினர். குடிபோதையில் இருந்த அவர்கள், நடத்துநரிடம் பேருந்தை சூலூருக்கு ஓட்டும்படி மிரட்டினர். 
இதற்கு மறுத்த நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் கீறிவிட்டு, பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்துக்கொண்டு தப்பியோடினர்.  

குற்றத்தில் ஈடுபட்ட இளையர்களைக் கைது செய்யாவிட்டால் பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று இதர பேருந்து நடத்துநர்களும் ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், நடத்துநரை கத்தியால் குத்திய அஜித், 24, இருகூரைச் சேர்ந்த சூர்யா, 19, ஆகிய இருவரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த மனோஜ், 23, என்பவரை அவர்கள்   தேடிவருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!