‘மக்களின் அனைத்து ஆசைகளும் 2022ல் நிறைவேறட்டும்’

திருச்சி: மக்­க­ளின் அனைத்து ஆசை­களும் இந்த 2022ஆம் ஆண்­டில் நிறை­வே­றட்­டும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

திருச்­சி­யில் நடை­பெற்ற அரசு விழா­வில் அவர் பேசி­ய­போது, "தமிழ்­நாட்­டில் இனி எந்­த­வொரு தனி மனி­த­ருக்­கும் அது இல்லை, இது இல்லை என்ற குறை­கள் எழாத வண்­ணம் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை அளிக்கவும் மனுக்­கள் கொடுக்­கப்­ப­டாத நிலை­மையை உரு­வாக்கவேண்­டும். அது­தான் என் இலட்­சி­யம்.

"அர­சி­டம் கோரிக்கை வைத்­தால் நிச்­ச­யம் நிறை­வே­றும் என்ற நம்­பிக்­கையை ஒரு சூழலை உரு­வாக்க வேண்­டும்.

"இப்­போது உறு­தி­யா­கச் சொல்­கி­றேன், இத்­த­கைய சுழற்சி முறையை எப்­போ­தும் நாங்­கள் நிறுத்­த­மாட்­டோம். சிலர் நினைக்­க­லாம், இப்­போ­து­தான் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள், ஆரம்­பத்­தில் இப்­ப­டித்­தான் - கல்­யாண ஜோர் - புது மாப்­பிள்ளை என்று நினைப்­பார்­கள். உறு­தி­யா­கச் சொல்­கி­றேன், நாங்­கள் எப்­போ­தும் இப்­ப­டித்­தான் இருப்­போம். எந்த நிலை­யி­லும் இதி­லி­ருந்து நாங்­கள் பின்­வாங்­க­மாட்­டோம்.

"இந்த ஆறு மாத காலத்­தில் ஏரா­ள­மான புதிய தொழில்­களை உரு­வாக்க ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தாகி இருக்­கிறது. அத­னால், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பை பெறப் போகி­றார்­கள். தமி­ழ­கத்­தின் தொழில் வளர்ச்சி என்­பது மிகப்­பெ­ரிய இலக்கை எட்ட இருக்­கிறது.

"நாளை (இன்று) 2022 புதிய ஆண்டு பிறக்­கிறது. புதிய ஆண்டு பிறக்­கப் போகும் நேரத்­தில் நான் குறிப்­பிட விரும்­பு­வது, மக்­க­ளின் அனைத்து ஆசை­களும் நிறை­வே­றும் ஆண்­டாக 2022 அமை­யட்­டும். அனைத்­துத் துறை­க­ளி­லும் தமி­ழ­கம் சிறந்து விளங்­கக்­கூ­டிய ஆண்­டாக இருக்­கட்­டும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!