பழனிசாமி: காழ்ப்புணர்ச்சி காரணமாகவே 2,000 மருந்தகங்கள் மூடப்படுகின்றன

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள 2,000 அம்மா மருந்­த­கங்­கள் மூட உள்­ள­தாக மருத்­துவ, மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "இந்த 2,000 மருந்­த­கங்­க­ளிலும் பணி­ய­மர்த்­தப்­பட்ட 1,820 மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் மார்ச் 31ஆம் தேதி வரை கொரோனா தடுப்­புப் பணி­க­ளி­லும் பின்­னர் வேறு மருத்­து­வச் சேவை­களி­லும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்," என்று தெரி­வித்­தார்.

'அம்மா மினி கிளி­னிக்' திட்­டத்­தைத் தொடங்­கியபோதே ஓராண்டு காலத்­திற்கு மட்­டும் தற்­கா­லி­க­மா­கவே இத்­திட்­டம் தொடங்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்டு, அர­சாணை வெளி­யி­டப்­பட்­ட­தாகவும் அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி­யின் உச்­சக்­கட்­டத்­தின் வெளிப்­பா­டா­கவே அம்மா மருந்த கங்கள் மூடப்­ப­டு­வ­தாக எதிர்க்­கட்­சித்­த­லை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

கிராம, நகர்ப்­பு­றங்­களில் வசிக்­கும் ஏழை, எளிய மக்­கள் பயன் பெறவே 'அம்மா மினி கிளி­னிக்' தொடங்­கப்­பட்­டது என­வும் மருந்த கங்கள் மூடப்படுவதன் மூலம் மக்கள் மீது அர­சுக்கு அக்­கறை இல்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்ளது என­வும் பழ­னி­சாமி சாடி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!