நில மோசடி: பெண் சாமியார் பவித்ரா கைது

திண்­டுக்­கல்: மோசடி வழக்கு ஒன்­றின் தொடர்­பில், பகட்­டான உடை­, நகை­கள் அணிந்து காளி­மா­தா­வாக மக்­க­ளி­டம் பிர­ப­ல­மான பெண் சாமி­யார் பவித்­ராவை திண்­டுக்­கல் காவல் துறை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

திண்­டுக்­கல் மேற்கு ஆரோக்­கிய மாதா தெரு­வில் வசித்து வரு­கி­றார் பபிதா என்­கிற பவித்ரா, 44. இவர், காளி­மா­தா­வின் மறு உரு­வம் என்று கூறி ஆசி வழங்கி பக்­தர்­க­ளைத் தன்­வ­சப்­ப­டுத்­தி­ய­வர்.

இந்­நி­லை­யில், கும்­ப­கோ­ணம் பகு­தி­யில் ஆசி­ர­மம் நடத்­து­வ­தற்கு நிலம் வாங்­கித் தரு­வ­தாக தவ­யோகி என்­ப­வ­ரி­டம் உறுதி கூறி, அவ­ரி­டம் இருந்து ரூ.5 லட்­சம் பணம், 60 சவ­ரன் தங்க நகை­க­ளைப் பெற்­றுள்­ளார் பவித்ரா.

ஆனால், நிலத்­தை­யும் வாங்­கித் தரா­மல் பணத்­தை­யும் திருப்­பித் தரா­மல் இழுத்­த­டித்து வந்­த­தால் பவித்ரா மீது தவ­யோகி ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு புகார் அளித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, நிலக்­கோட்டை காவல்­து­றை­யி­னர் பவித்­ரா­வைத் தேடி வந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் அவ­ரது வீட்­டுக்­குச் சென்­ற­போது, பவித்­ரா­வும் அவ­ரது தங்கை ரூபா­வ­தி­யும் தங்­கள் வீட்­டில் இருந்து ஒவ்­வொரு மாடி­யாக தாவிச் சென்­றுள்­ள­னர். ஆனால், காவல்­துறை அதி­கா­ரி­கள் அவர்­களை விடா­மல் துரத்­திப் பிடித்­த­னர்.

அவர்­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை செய்ய நிலக்­கோட்டை அரசு மருத்­து­வ­ம­னைக்கு அைழத் துச் சென்­ற­போது, திடீ­ரென்று சாமி வந்­த­வர் போல் ஆட்­டம் காட்­டி­யுள்­ளார் பவித்ரா.

தானே காளி என்­றும் அர­சி­யல்­வா­தி­கள் பல­ரும் தன்­னி­டம் ஆசி பெற்­ற­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

நிலக்­கோட்டை அருகே வீலிநாயக்­கன்­பட்­டி­யில் ஞான­தே­வ­பா­ரதி என்­ப­வர் ஆசி­ர­மம் நடத்­து­கி­றார். அங்கு பணி­யாற்றி வந்த பவித்ரா கருத்து வேறு­பாடு கார­ண­மாக ஆசி­ர­மத்தை விட்டு வெளி­யேற்­றப்­பட்­டார். இதைத்­தொ­டர்ந்து பவித்ரா, தன்னை காளி­மா­தா­வாக மக்­க­ளி­டம் அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்­டார்.

அண்­மை­யில்­தான் அன்­ன­பூ­ரணி என்ற பெண் சாமி­யார் தொடர்­பான சர்ச்சை அடங்­கி­யது. இப்­போது பவித்ரா சிக்கியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!