பிரபல தமிழ் யூடியூப் ஒளிவழிகள் முடக்கம்

இந்தியாவில் அதிகப் பார்வையாளர்கள் கொண்ட பிரபல தமிழ் யூடியுப் ஒளிவழிகள் சில முடக்கப்பட்டுள்ளன.

பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சோதனைகள், சென்னை மீம்ஸ், தியேட்டர் டி, உள்ளிட்ட சுமார் 15 ஒளிவழிகள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

அவற்றுடன், குறைவான பார்வையாளர்கள் கொண்ட 100க்கும் மேற்பட்ட பிரபலம் அல்லாத ஒளிவழிகளும் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை (ஜனவரி 7) இரவு அந்த ஒளிவழிகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முடக்கப்பட்ட அனைத்து யூடியூப் ஒளிவழிகளிலும் கிரிப்டோகரன்சி எனும் குறியீட்டு நாணயம் தொடர்பான விளம்பரங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

செயலிழந்த ஒளிவழிகள் சிலவற்றை மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பின்தொடர்ந்தனர்.

பெரும்பாலான ஒளிவழிகள் நகைச்சுவை நாடகங்கள், நையாண்டிகள் போன்றவற்றை ஒளிபரப்பின.

தியேட்டர் டி பொன்னியின் செல்வன் கதை எளிய வடிவில் சொல்லப்பட்டு வந்தது.

பல தமிழ் யூடியூப் ஒளிவழிகள், அவற்றின் காணொளிகளில் குறியீட்டு நாணய முதலீடு, அதன் தொடர்பான விளையாட்டுகள் போன்றவை குறித்த விளம்பரங்களைப் பதிவேற்றி வருமானம் ஈடடி வந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!