‘நீட்’ தேர்வு: சட்டப்போராட்டத்துக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆதரவு

சென்னை: நீட் தேர்­வுக்கு எதி­ராக சட்­டப்­போ­ராட்டம் மேற்­கொள்ள முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நடை­பெற்ற அனைத்­துக்­கட்சி கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று நடை­பெற்ற இந்­தக் கூட்­டத்­தில் நீட் தேர்வு தொடர்­பாக கடந்த ஆண்டு தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு மீண்­டும் பாஜக தவிர மற்ற கட்­சி­கள் ஆத­ரவு தெரி­வித்­தன.

இக்கூட்­டத்­திற்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய, தமி­ழக மக்­கள் நலத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், நீட் தேர்வு மாநில சுயாட்­சிக்கு எதி­ரா­னது என்­றார்.

இந்­தத் தேர்­வின் மூலம் மாநில அர­சு­க­ளின் உரி­மையை மத்­திய அரசு பறித்து விட்­ட­தாக அவர் குற்­றம்­சாட்­டி­னார்.

"நீட் தேர்­வுக்கு சிறப்­புப் பயிற்சி­களை வசதி உள்ள மாண­வர்­கள் மட்­டுமே பெற முடி­யும். இத­னால் 12 ஆண்­டு­கள் படிக்கக் கூடிய பள்ளிக் கல்­வி­யால் எந்­த­வித பயனும் இல்லை.

"நீட் தேர்­வுக்கு எதி­ராக சட்டப்­ போ­ராட்­டத்தை முன்­னெ­டுப்­பது என்று அனைத்­துக் கட்சி கூட்­டத்­தில் ஒரு­ம­ன­தாக முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் பங்­கேற்ற 12 கட்­சி­கள் நீட் விலக்க தீர்­மா­னத்­திற்கு ஆத­ரவு அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், நீட் விலக்கு மசோ­தாவை தமி­ழக ஆளு­நர் இன்­னும் குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்­பா­தது சட்­டப்­பே­ரவை மாண்பை சிதைக்­கும் வகை­யில் உள்­ளது என்­றார்.

முன்­ன­தாக அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் பேசிய முன்­னாள் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், நீட் தேர்வு ரத்து நிலை­ப்பாட்­டில் அதி­முக உறு­தி­யாக உள்­ளது என்­றும் இது தொடர்­பாக தமி­ழக அரசு மேற்­கொள்­ளும் அனைத்து முயற்­சி­க­ளுக்­கும் அதி­முக துணை நிற்­கும் என்­றும் தெரி­வித்­தார்.

இந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்ற பாஜ­க­வின் வானதி சீனி­வா­சன் வெளி­ந­டப்பு செய்­தார்.

இதற்­கி­டையே தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்ட நீட் தேர்வு விலக்கு தொடர்­பான மசோ­தாவை அதி­ப­ருக்கு அனுப்­பாத தமி­ழக ஆளு­நரை திரும்­பப் பெற வேண்­டும் என காங்­கி­ரஸ், விடு­த­லைச் சிறுத்­தை­கள் உள்­ளிட்ட கட்­சி­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

ஆளு­ந­ரின் செயல்­பாடு அக்­கு­றிப்­பிட்ட சட்ட மசோ­தாவை அவ­மதிப்­ப­தாக உள்­ளது என்று தமி­ழக காங்­கி­ரஸ் தெரி­வித்­துள்­ளது.

விடு­தலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்­செ­ய­லா­ளர் சிந்­தனை செல்­வன் கூறு­கை­யில், நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்­பாக தமிழக எம்பிக்­கள் அனை­வ­ரை­யும் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா சந்­திக்­காமல் இருப்­பது வருத்­த­ம­ளிப்பதாகக் குறிப்­பிட்­டார். இதற்கிடையே, பாஜக சார்பில் கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை ஏற்க இயலாது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!