ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300 வீரர்கள், 150 பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி

மதுரை: கொரோனா தொற்­றில் இருந்து மக்­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில், ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் 150 பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் 300 மாடு­பிடி வீரர்­க­ளுக்­கும் மட்­டுமே அனு­மதி அளிக்­கப்­படும் என தமி­ழக அரசு நேற்று தெரி­வித்­தது.

பொங்­கல் பண்­டி­கையை ஒட்டி மதுரை மாவட்­டத்­தில் வரும் 14ஆம் தேதி அவ­னி­யா­பு­ரம், 15ஆம் தேதி பால­மேடு, 16ஆம் தேதி அலங்­கா­நல்­லூ­ரில் ஜல்­லிக்­கட்டு போட்டி நடை­பெற உள்­ளது. இதற்­கான ஆயத்­தப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இதற்­கி­டையே, அவ­னி­யா­பு­ரம் ஜல்­லிக்­கட்டு போட்­டியை மாவட்ட நிர்­வா­கமே நடத்த உள்­ள­தாக மதுரை மாவட்ட ஆட்­சி­யர் அனீஷ் சேகர் கூறி­யுள்­ளார்.

"ஜல்­லிக்­கட்டை நடத்­து­வது குறித்து இரு குழு­வி­ன­ரி­டம் நடத்­திய பேச்­சு­வார்த்தை முடி­வ­டை­ய­வில்லை. அத்­து­டன், அவ­னி­யா­பு­ரம் ஜல்­லிக்­கட்­டில் இந்த ஆண்டு நேர­டி­யாக 'டோக்­கன்' வழங்­கும் முறை ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது," என்று அனீஷ் சேகர் மேலும் கூறி­னார்.

போட்­டியை நடத்­து­வ­தற்­கான வழி­காட்டு நெறி­மு­றை­கள்:

இரு தடுப்­பூ­சி­யை­யும் ேபாட்­டுக்­கொண்ட வீரர்­கள் மட்­டுமே ஜல்­லிக்­கட்டு போட்­டி­யில் பங்­கேற்­க­வேண்­டும். போட்டி நடை­பெ­றும் இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு அனைத்து வீரர்­களும் கொரோனா பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும்.

ஜல்­லிக்­கட்டு, மஞ்­சு­வி­ரட்டு, வட­மாடு நிகழ்ச்­சி­களில் மாடு­பிடி வீரர்­கள் 300 பேருக்கு மிகா­மலும் எரு­து­வி­டும் நிகழ்­வில் 150 வீரர்­க­ளுக்கு மிகா­மலும் பங்­கேற்க அனு­மதி வழங்­கப்­படும். காளை­யு­டன் அதன் உரி­மை­யா­ளர் ஒரு­வருக்கும் உத­வி­யா­ளர் ஒரு­வ­ருக்கும் மட்­டுமே அனு­மதி வழங்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!