மதுரை, கோவை மாவட்டங்களில் கிருமிப்பரவல் இரட்டிப்பானது

மதுரையில் 139 பேருக்கு சுவாச உதவி; கோவையில் வார்டுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர்

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், நேற்று முன்­தி­னம் புதி­தாக 15,379 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

மதுரை, கோவை உள்­ளிட்ட மாநி­லங்­களில் தொற்­றுப்­ப­ர­வல் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

செவ்­வாய்க்­கி­ழமை ஒரே நாளில் மேலும் 20 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். மொத்த பலி எண்­ணிக்கை 36,886ஆக கூடி­யுள்­ளது.

தற்­போது சிகிச்சை பெறு­வோ­ரின் மொத்த எண்­ணிக்கை 75,083ஆக கூடி­யுள்­ளது.

ஜன­வரி 1ஆம் தேதி அன்­றாட பாதிப்பு 1,489ஆகப் பதி­வான நிலை­யில், பத்தே நாள்­களில் தொற்றுப் பாதிப்பு பல­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது.

மது­ரை­யில் கொரோனா தொற்று மின்­னல் வேகத்­தில் பர­வு­வ­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

ஐந்து நாள்­க­ளுக்கு முன்பு கட்டுக்­குள் இருந்த தொற்றுப் பாதிப்பு, மள­ம­ள­வென அதி­க­ரித்த­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 1,745ஆக அதி­க­ரித்­தது.

நேற்று முன்­தி­னம் மட்­டுமே அங்கு 512 பேர் பாதிக்­கப்­பட்­டதை அடுத்து, மாவட்ட அள­வி­லான பாதிப்­புப் பட்­டி­ய­லில் மதுரை ஆறா­வது இடத்­தில் உள்­ளது.

1,275 பேர் மருத்­து­வ­ம­னை­யி­லும் 471 பேர் வீட்­டுத்­த­னி­மை­யி­லும் உள்­ள­னர். இவர்­களில் 139 பேருக்கு சுவாச உதவி அளிக்­கப்­பட்­டுள்­ளது. 17 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்­ள­னர்.

மது­ரை­யைப் போன்று கோவை­யி­லும் தொற்­றுப் பர­வல் வேகம்­பிடித்­ததை அடுத்து, அங்கு மாநக ராட்­சிக்கு உட்­பட்ட ஒவ்­வொரு வார்­டி­லும் தலா ஒரு சிறப்பு அலு­வ­லர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

மொத்­த­முள்ள நூறு வார்­டு­களில், நூறு அலு­வ­லர்­கள் பொறுப்­பேற்­றுக்கொண்­டதை அடுத்து, அவர்­க­ளுக்­குள் ஒருங்­கி­ணைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், தொற்று அறி­கு­றி­கள் உள்­ள­வர்­களை இவர்­கள் அடை­யா­ளம் கண்டு மாநகராட்சிக் குத் தெரி­யப்­ப­டுத்­து­வர்.

கோவை மாவட்­டத்­தில் செவ்­வாய்க்­கி­ழமை புதி­தாக 863 பேருக்கு கிருமி தொற்­றி­யது. ஒரு­வர் சிகிச்சை பல­னின்றி பலி­யா­கி­விட்­டார். இது­வரை 16 பகு­தி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தமி­ழ­கத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில், ஆக அதி­க­மாக சென்­னை­யில் 6,484 பேர் நேற்று முன்­தி­னம் பாதிப்­புக்கு ஆளாகி உள்­ள­னர். செங்­கல்­பட்­டில் 1,665 பேர், திரு­வள்­ளூ­ரில் 893 பேர், காஞ்­சி­பு­ரத்­தில் 580 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!