மெட்டவெர்ஸ் மெய்நிகர் தளத்தில் நடக்கும் தமிழ் திருமண வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் கிராமத்தில், பிப்ரவரி 6ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கின்றனர் தினேஷ், ஜனகநந்தினி எனும் இளம் காதலர்கள்.

பின்னர் இரவில் திருமண வரவேற்பு.

பட்டாடை உடுத்தி, வரவேற்பு நடக்கும் இடத்துக்கு காரில் செல்வதற்குப் பதில் அவர்கள் தங்கள் கணினிவழி அங்கு செல்ல இருக்கின்றனர்.

தங்கள் திருமண வரவேற்பை மெய்நிகர் வடிவில், 'மெட்டவெர்ஸ்' எனும் புதிய மின்னிலக்கத் தளத்தில் நடத்தவுள்ளனர் இந்தக் காதலர்கள்.

திருமண வரவேற்பு கூடமும் மெய்நிகரில் முப்பரிமாண வடிவில் இருக்கும்.

தினேஷும் ஜனகநந்தினியும் அவதார் எனும் மெய்நிகர் வடிவம் கொண்ட முப்பரிமாண பாத்திரங்களாகி அதன் உள்ளே செல்வார்கள்.

திருமண விருந்தினர்களும் நேரில் வரத் தேவையில்லை.

இணையத் தொடர்பு முகவரியைக் கொண்டு மெட்டவெர்ஸ் தளத்துக்குள் சென்று, அங்கிருக்கும் அவதார்களில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களும் விருந்தினர்களும் மெய்நிகர் முப்பரிமாணப் பாத்திரங்களாகவே சந்தித்துக் கொள்வார்கள்.

மொய் பணத்தையும் இணையம் வழியாகவே மணமக்கள் பெற்றுக்கொள்வார்கள்.

மெய்நிகர் உலகில் நடைபெறவுள்ள இந்த அதிசய திருண வரவேற்பு இந்தியாவையும் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஐஐடி மெட்ராசில் பணிபுரியும் தினேஷ், புத்தம்புதிய தொழில்நுட்பங்களை உள்ளங்கையில் வைத்திருப்பவர்.

அதனால் தமது திருமண வரவேற்புக்கு 'மெட்டவெர்ஸ்' தளத்தை அவர் தேர்வுசெய்தார்.

தினேஷ் இந்த யோசனையை ஜனகநந்தினியிடம் கூற அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார்.

தனது பெயரை 'மெட்டா' என்று மாற்றிக்கொண்டுள்ள ஃபேஸ்புக், அமைத்துக்கொண்டிருக்கும் மின்னிலக்க உலகம்தான் மெட்டாவெர்ஸ்.

உண்மை உலகம் போலவே இருக்கும் முப்பரிமாண உலகம் அது.

மெய்நிகர் தொழில்நுட்பம், அதன் அடுத்த கட்டமான மிகைப்படுத்தப்பட்ட மெய்நிகர் (augmented reality), பிளாக்செயின் எனும் இணைய மின்னிலக்கத் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டு அந்த உலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அவதார் ஆங்கிலத் திரைப்படத்தில் எவ்வாறு மனிதர்கள் தொழில்நுட்பம் கொண்டு வேற்றுக் கிரகத்தில் வேறு தோற்றம் கொள்வார்கள்.

அதேபோல இந்த மெட்டவெர்ஸ் தளத்தில் அவதார்கள் எனும் முப்பரிமாண பாத்திரங்கள் இருக்கும்.

நோய்ப் பரவல் சூழலில் நேரில் வந்து வாழ்த்த முடியாத தங்கள் அன்புக்குரியவர்கள் மிகைப்படுத்த மெய் வடிவிலான இந்த தளத்தில் வந்து தங்களை வாழ்த்தலாம் என்று தினேஷ், ஜனகநந்தினி இருவரும் கூறினர்.

காலஞ்சென்ற ஜனகநந்தினியின் தந்தையின் புகைப் =படங்களைக் கொண்டு அவரையும் அவதார் பாத்திரமாக உருவாக்கி, திருமண வரவேற்பில் கலந்துகொள்ள வைக்கவுள்ளனர்.

ஆனால் ஒரே ஒரு குறைதான் திருமணத்தில்.

மெட்டவெர்ஸ் தளத்தில் விருந்துக்கு இடமில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!