தமிழகத்தில் 30,000 பேருக்கு பாதிப்பு; 50,000 இடங்களில் நடந்த 19வது தடுப்பூசி முகாம் மூன்றாவது முழு ஊரடங்கு

சென்னை: தமிழ்­நாட்­டில் தொடர்ந்து அதி­க­ரித்து வரும் கொவிட்-19, ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க, இன்று மூன்­றா­வது ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யாக முழு ஊர­டங்கை தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

மருத்­து­வ­ம­னை­கள், மருந்­த­கங்கள், பெட்­ரோல் நிலை­யங்­கள், ஏடிஎம் இயந்­தி­ரங்­கள் செயல்­ப­ட­வும் அனு­மதி அளிக்­கப்பட்­டுள்­ளது.

­இதுகுறித்து முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வெளி­யிட்­டுள்ள அறி­விப்­பில், கடந்த ஞாயி­றன்று நடை­மு­றை­யில் இருந்த கட்­டுப்­பா­டு­கள், தளர்­வு­கள் இவ்வார­மும் தொட­ரும்.

அத்­து­டன், வெளி­யூ­ரில் இருந்து வரும் ரயில், விமா­னப் பய­ணி­க­ளின் நலன் கருதி சென்னை சென்ட்­ரல், எழும்­பூர் ரயில் நிலை­யங்­கள், கோயம்­பேடு பேருந்து நிலை­யம் போன்ற இடங்­களில் வழக்­க­மான ஆட்டோ சேவை­கள் செயலி மூலம் முன்­ப­திவு செய்து இயக்­கப்­படும்.

அதேபோல், வாடகை கார்­களும் பய­ணி­களை ஏற்­றிச்­செல்ல அனு­ம­திக்­கப்­படும் என­த் தெரி விக்­கப்­பட்­டுள்­ளது.

கிருமித்தொற்­றில் இருந்து மக்­க­ளைப் பாது­காக்கும் வகையில், அரசு மேற்­கொள்­ளும் நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு தங்களது முழு ஒத்­து­ழைப்பை மக்கள் வழங்கவேண்டும் எனவும் முதல்­வர் கேட்­டுக்­கொண்டார்.

இந்­நி­லை­யில், முழு ஊர­டங்கை முன்னிட்டு நேற்றைய தினம் காசி­மேடு மீன் சந்­தை­யில் கூட்­டம் அலை­மோ­தி­யது. மீன் வாங்­கும் ஆர்­வத்­தில் சமூக இடை­வெ­ளியை மக்­கள் மறந்து போயி­னர்.

இதற்­கி­டையே, தலைநகர் சென்னை உள்­ளிட்ட பெருநக­ரங்­களில் கொரோனா பாதிப்பு குறைவதாக­வும் தடுப்­பூ­சி­யால் உயி­ரி­ழப்பு பெருமள­வில் குைறந்­துள்­ள­தா­க­வும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

மாநி­லம் முழு­வ­தும் நேற்று 50,000 இடங்­களில் 19வது கொரோனா தடுப்­பூசி முகாம் மும்­மு­ர­மாக நடை­பெற்­றது.

வீடு­க­ளுக்கு அரு­கி­லேயே தடுப்பூசி போடப்படுவதால், மக்கள் தயங்காமல் தடுப்­பூசி போட்­டுக்கொண்டு பாது­காப்­பு பெறவேண்டும் என சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் ககன்­தீப் சிங் பேடி கேட்­டுக்­கொண்டார்.

தமி­ழ­கத்­தில் அன்றாட கிருமி பாதிப்பு 30,000ஐ நெருங்­கி­யுள்­ளது. கடந்த 24 மணி நேரத்­தில் 29,870 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் 33 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இதற்கிடையே, தமி­ழக அரசு அமல்­ப­டுத்தி உள்ள ஞாயிறு ஊர­டங்­கால் தங்­க­ளது வாழ்­வா­த­ாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொது மக்­களும் வியா­பா­ரி­களும் வருத்­தம் தெரி­வித்­துள்­ள­னர்.

மற்ற நாட்­க­ளைப் போல் ஞாயி­றன்­றும் இரவு நேர ஊர­டங்கை அமல்­ப­டுத்தவேண்­டும் என அவர்கள் கோரிக்கை விடுத்­துள்ள­தாக ஜெயா தொலைக்­காட்சி செய்தி தெரி­வித்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!