‘சிபிஐ விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும்’

சென்னை: அரி­ய­லூர் மாணவி உயிரை மாய்த்­துக்கொண்­டது தொடர்­பாக சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்பு விசா­ரணை நடத்த வேண்­டும் என தமி­ழக பாஜக தலைவர் அண்­ணா­மலை வலியுறுத்தி உள்­ளார்.

அப்­போ­து­தான் முழு உண்மை­யும் வெளி­வ­ரும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் அரி­ய­லூர் மாணவி ஒரு­வர், பள்­ளிக்­கூ­டத்­தின் நிர்­வா­கம் தம்மை மதம் மாறச்­சொல்லி வற்புறுத்­தி­ய­தால் மன­மு­டைந்து உயிரை மாய்த்­துக்கொண்­ட­தா­கப் புகார் எழுந்­துள்­ளது. இது தொடர்­பாக பள்ளி நிர்­வா­கம் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி, இறந்த மாண­வி­யின் தந்தை உயர் நீதி­மன்ற மதுரை கிளை­யில் வழக்கு தொடுத்­துள்­ளார். மேலும் இது­குறித்து சிபி­சி­ஐடி விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­ட­வும் வலி­யு­றுத்தியுள்­ளார்.

இந்­நி­லை­யில், மாணவி விவ­கா­ரத்­தில் தமி­ழக அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி தமி­ழக பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை தலை­மை­யில் சென்­னை­யில் உண்­ணா­வி­ர­தப் போராட்­டம் நடை­பெற்­றது.

அப்­போது பேசிய அவர், கட்­டாய மத­மாற்ற தடைச் சட்­டம் கொண்டு வர­வேண்­டும் என்­பது தமிழக மக்­க­ளின் விருப்­ப­மாக உள்­ளது என்­றும் அரி­ய­லூர் மாணவி வழக்கு சிபி­ஐ­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டால்­தான் அனைத்து உண்­மை­களும் வெளி­வ­ரும் என்­றும் கூறி­னார்.

"இந்­தி­யா­வில் மூன்று, நான்கு மாநி­லங்­களில் இந்த சட்­டம் தற்போது நடை­மு­றை­யில் உள்­ளது. தமி­ழ­கத்­தில் நடை­பெ­றும் ஒவ்­வொரு முறை­யும் நிக­ழும் இது­போன்ற சம்­ப­வங்­கள் இந்­தச் சட்­டத்­தைக் கொண்­டு­வர கட்­டா­யப்­ப­டுத்­து­கின்­றன," என்­றார் அண்­ணா­மலை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!